கார்கில் போரின் போது இந்தியாவை ஏமாற்றிய உலக நாடுகள்; செயற்கைகோள் படங்களுக்கு அதிக பணம் வசூல் செய்த நாடுகள்

கார்கில் போரின் போது இந்தியாவை ஏமாற்றிய உலக நாடுகள்; செயற்கைகோள் படங்களுக்கு அதிக பணம் வசூல் செய்த நாடுகள்

முன்னாள் இந்திய விமானப்பைடை தளபதி வேத்பிரகாஷ் மாலிக் அவர்கள் வெள்ளியன்று வெளியிட்ட தகவல் படி கார்கில் போரின் போது இந்தியா அவரச தேவையாக வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்த வெடிபொருள்கள்,இராணுவ தளவாடங்கள் மற்றும் செயற்கை கோள் படங்களுக்காக அந்த நாடுகள் இந்தியாவிடம் அதிக பணம் வசூல் செய்ததாக கூறியுள்ளார்.

எல்லா அவரசமாக வாங்கப்பட்ட தளவாடங்களுக்கான ஒப்பந்தங்களின் போது எல்லா நாடுகளுமே ( நட்பு நாடுகள் உட்பட) அவர்களால் எவ்வளவு அதிகமாக பணம் வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கினர் என கூறியுள்ளார்.

முதலாக ஒரு நாட்டிடம் அவரச தேவையாக துப்பாக்கி கேட்டால் அவர்கள் தருவதாக வாக்குறுதி அளித்து கடைசியாக பழைய துப்பாக்கிகளை வழங்கினர்.அதற்கான குண்டுகளுக்காக வேறொரு நாட்டிடம் கேட்ட போது 1970 ஆண்டு பழைய குண்டுகளை வழங்கினர் என்று அவர்  ‘Make in India and the Nation’s Security’ என்ற நிகழ்ச்சியின் போது கூறியுள்ளார்.

1999 கார்கில் போர் காலகட்டத்தில் வேத் பிரகாஷ் மாலிக் அவர்கள் தான் தளபதியாக இருந்தார்.அவர் மேலும் கூறிய போது செயற்கை கோள் படங்களுக்காக ஒரு படம் 36,000ரூ என்ற அளவில் கொடுக்கப்பட்டதாகவும் அதுவும் மூன்று ஆண்டு பழைய படங்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்திய இராணுவத்தின் வெளிநாட்டு ஆயுத மோகம் குறித்து பேசிய போது இந்தியாவின் அரசு நிறுவனங்கள் தேவையான தளவாடங்களை தேவையாக நேரத்தில் வழங்க இயலாமல் போவதே இதற்கு காரணம் என்று பேசியுள்ளார்.

இந்தியா பாதுகாப்பு தளவாட தயாரிப்பில் தன்னிறைவை பெறுவது அவசியம் என பேசினார்.தற்போது உள்ள காலத்தில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.நம்மிடம் உள்ள குறை திட்டம் என்னவென்றால் ஒரு தளவாடம் தயாரித்து வழங்க நேரமாகிறது.அது குறிப்பிட்ட நேரத்தில் இராணுவத்தின் கைகளில் கிடைப்பதில்லை.அது காலதாமதமாகி கிடைக்கும் நேரத்தில் அந்த தொழில்நுட்பம் பழையதாய் மாறி இருக்கும் என கூறியுள்ளார்.

இது தவிர இராணுவ தளவாட தயாரிப்பில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுவதன் அவசியம் குறித்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.