ஐஎன்எஸ் விசால் கட்டுமானத்திற்கு அமெரிக்க கடற்படை உதவ தயார்
இந்திய கடற்படை சுமார் 65,000 டன்கள் எடையுடைய விசால் என்னும் விமானம் தாங்கி கப்பலை கட்ட உள்ளது.இதை கட்டுவதற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளன.இந்த ஆபர் குறித்து முடிவெடித்து வருவதாக தளபதி கூறியுள்ளார்.
HMS Queen Elizabeth வகை விமானம் தாங்கி கப்பல் மாதிரியை இங்கிலாந்து இந்தியாவிற்கு அளிக்க முன்வந்துள்ளது.
இந்தியா அமெரிக்காவின் Electromagnetic aircraft (EMALS) launch and recovery அமைப்பு மாதிரியில் விமானம் தாங்கி கப்பல் கட்ட முயன்றாலும் அது அதிக அளவு அமெரிக்கா சார்பை வேண்டியிருக்கும்.
ஆனால் விசால் குறித்த முன்மாதிரியை இந்திய கடற்படை முடிவு செய்து கடைசி கட்ட அனுமதிக்காகஅனுப்பியுள்ளது.
தற்போது அமெரிக்க கடற்படைக்காக விமானம் தாங்கி கப்பல்கள் கட்டி வரும்
Newport News Shipbuilding (NNS) விசால் தயாரிப்பில் இந்தியாவிற்கு உதவுவதாய் கூறியுள்ளது.
இந்த நிறுவனம் nuclear-powered Super aircraft carriers கப்பல்களை வடிவமைத்து கட்டிவருகிறது.கப்பல் கட்டுவதில் அனுபவமும் பெற்றுள்ளது.
ஆனால் இந்தியாவின் விசால் அணுசக்தி புரோபல்சன் பெற்றிருக்காது என கூறப்படுகிறது.எனவே இங்கிலாந்து Integrated electric propulsion (IEP) composing of Two Rolls-Royce Marine 36 MW MT30 gas turbine alternators and four 10 MW diesel engines அளிக்க முன்வந்துள்ளது.
தற்போது இந்திய கடற்படை இந்த ஆபர்களை கருத்தில் கொண்டு விரைவில் முடிவு எடுக்கும்.