இந்திய கடற்படையின் மிரட்டலான அதிரடிகளும், பாக்கின் அழிவும்

இந்தச் சமயத்தில் இந்தியக் கடற்படை இரகசிய கடற்படை நடவடிக்கைகளை தொடங்கியது.அவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.1971 வருடத்தின் டிசம்பர் மாதம்   மேற்கு பாகிஸ்தானிடம் இருந்து ,கிழக்கு பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியக் கடற்படை கிழக்கு பாகிஸ்தான் துறைமுகங்களை சுற்றி தனது போர்க்கப்பல்கள் கொண்டு தடையை ஏற்படுத்தியது.இதனால் கிழக்கு பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பல்கள் தங்கள் துறைமுகங்களிலேயே முடங்கிப் போயின.அது மட்டுமல்லாமல் எட்டு வெளிநாட்டு வணிக  கப்பல்களும் மாட்டிக் கொண்டன.

Vikrant AC

இதனால் பாகிஸ்தான் இராணுவ தலைமையகம் ,காஸி நீர்மூழ்கியை களமிறக்க சொல்லி பாக் கடற்படையிடம் வேண்டியது.மேலும் அதை கிழக்கு பாகிஸ்தான் கடற்கரை பகுதிக்கு அனுப்பி சில நடவடிக்கைகள் மேற்கொள்ள கூறியது.ஆனால் இதற்கு பாக் கடற்படையின் நீர்மூழ்கி பிரிவின் தலைமை( Officer in Command ), பழைய நீர்மூழ்கியை வங்கதேச கடற்பகுதிக்கு  அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தது.மேற்கு பகுதியில் இருந்து தொலைதூரம் அனுப்பி, பழுது நீக்கம்,தளவாட தேவை நிவர்த்தி செய்ய முடியாத தொலைவுக்கு அனுப்புவது சரியாகாது என வாதிட்டது.மேலும் அந்நேரத்தில் , கிழக்கு பாகிஸ்தானின்  துறைமுகமான சிட்டகாங்கில்  நீர்மூழ்கி பழுதுநீங்க இயந்திரவியலாளர்கள் யாரும் இல்லை.

சொல்லப்போனால் கிழக்கு பாகிஸ்தான் கடற்படையில் பெரிய போர்க்கப்பல்கள் கொண்ட ஒரு ஸ்குட்ரான் கூட இல்லை.வெறுமனே பழுப்பு நிற கடற்படை என்ற பெயரில் சில இயந்திர துப்பாக்கிகள் பொறுத்தப்பட்ட கப்பல்கள் மட்டுமே இருந்தன.இவைகள் மட்டுமே இங்கு நிரந்திரமாக இயங்கின.அதே நேரத்தில் சிட்டகாங் துறைமுகத்தில் ஒரு சரியான கப்பல் பழுதுநீக்கும் அமைப்பு கூட இல்லாமல் இருந்தது.

அதே நேரத்தில் இந்தியக் கடற்படையின் கிழக்கு தலைமையகத்தின் கீழ் இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் அதன் துணைக் கப்பல்களான   INS குல்டார், INS கேரியல், INS மகர் மற்றும் நீர்மூழ்கி   INS காந்தேரி போன்றவை தன்னிச்சையாகவே நடவடிக்கைகள்  மேற்கொண்டன.பாக்கின் கிழக்கு கடற்படை கப்பல்களிலிருந்து இவைகளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாமலிருந்தது.

டிசம்பர் 4,1971ல்  INS விக்ராந்த் (R11) விமானம் தாங்கிகப்பல் தனது ஹாக்கர் சீ ஹாக்(Hawker Sea Hawk) தாக்கும் விமானத்தின் உதவியோடு கிழக்கு பாகிஸ்தானில் வான் நடவடிக்கைகளை தொடங்கியது.

ஹாக்கர் சீ ஹாக்

அவை வெற்றிகரமான கிழக்கு பாகிஸ்தானின் கடற்கரை நகரங்களான சிட்டகாங் மற்றும் கோக்ஸ் பஜார் ஆகியவற்றை தாக்கின. இந்த தொடர் தாக்குதல்களால் பாக் தனது  எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடங்க முடியாமல் போயிற்று.

ஆனால் பாகிஸ்தான் தனது காஸி நீர்மூழ்கியை களமிறக்கியது.காஸி நீர்மூழ்கியை களமிறக்க வேண்டாம் என்ற அதன் கமாண்டிங் அதிகாரிகளின் யோசனையை நிராகரித்த பாக் கடற்படை தலைமை, பாக்கின் நீண்ட தூரம் செல்லும் ஒரே நீர்மூழ்கியான காஸியை  களமிறக்கியது.கமாண்டர் ஷாபர் முகம்மதுவின் கீழ் காஸி, விக்ராந்தை தகர்க்க அனுப்பி வைக்கப்பட்டது.அவ்வாறு வீழ்த்த முடியாத பட்சத்தில் இந்திய கிழக்கு கடற்படையின் தலைமை துறைமுகமான விசாகப்பட்டிணக் கடற்கரை பகுதியில் கண்ணிகளை பதித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது.

காஸி

இந்தியக் கடற்படைக்கு இந்த விசயம் தெரிந்து போக, விக்ராந்தின் இருப்பு பற்றி தவறான தகவல்களை வெளியிடுவதன் மூலம் காஸியை சிக்க வைக்க  முயற்சி செய்தது.டிசம்பர் 3-4 நடுஇரவில் காஸி விசாகப்பட்டினக் கடற்கரைப் பகுதியில் கண்ணிவெடிகளை விதைக்க ஆரம்பித்திருந்தது. இதை அறிந்த இந்தியக் கடற்படை,  INS இராஜ்புத் போர்க்கப்பலை அனுப்பியது.

நீருக்கடியில் அசைவை உணர்ந்தது இராஜ்புத்தின் சோனார் அமைப்பு.உடனே நீருக்கடியில் இரண்டு நீர்மூழ்கி அழிக்கும் வெடிகுண்டை இறக்கியது.ஆனால் மர்மமாக காஸிநிர்மூழ்கி நீரில் மூழ்கியது.அதில் இருந்த 92 பாக் வீரர்களும் உயிரிழந்தனர்.

காஸியின் வீழ்ச்சி பாகிஸ்தான் கடற்படையின் கிழக்கு பகுதி நடவடிக்கைகளுக்கு பெரிய அடியாக விழுந்தது.இதனால் பாகிஸ்தான் பெரிய அளவு கடற்படை நடவடிக்கைகளை வங்காள விரிகுடா பகுதியில் நடத்த முடியாமல் போனது. நவம்பர் 26ம் தேதியே பாக் கடற்படை தலைமை ,காஸி கப்பலை துறைமுகம் திரும்ப அழைத்திருந்ததாக தகவல் கூறுகிறது.அந்த சமயத்தில் அது விக்ராந்தை தேடி தேடி வெறுமையுடன் நின்றது.இந்த தகவல் காஸியை சென்றடையவில்லை.டிசம்பர் 3 போர் தொடங்குவதற்கு முன்பே காஸியின் தலைவிதி இந்தியக் கடற்படையால் எழுதப்பட்டுவிட்டது.

டிசம்பர் 5/6 ல் , கடற்படையின் வான் நடவடிக்கைகள் உச்சம் அடைந்தன.சிட்டகாங்,குல்னா,மங்ளா துறைமுகங்கள் தாக்கப்பட்டன.புஸ்ஸூர் ஆற்றில் இருந்த கப்பல்கள் ,சிட்டகாங் துறைமுகத்தில் இருந்த எண்ணைய் சேமிப்பு கிடங்குகள் அழிக்கப்பட்டன.அதே போல் தெடிக் சார்லி என்று பெயரிடப்பட்ட கிரீக் வணிகக் கப்பல் கூட மூழ்கடிக்கப்பட்டது.

டிசம்பர்  7/8ல் கிழக்கு பாக் விமானப் படையின் தளங்கள் தாக்கப்பட்டன.அது டிசம்பர் 9ம் தேதிவரை தொடர்ந்தது. இந்தியக் கடற்படையின் நீர்-நிலக் கப்பல்கள் (Amphibious landing ship ) சிட்டகாங் நிலத்தில் செல்லாதவாறு துறைமுகத்தை சுற்றி கண்ணிகளை பாக் இறைத்துவிட்டது.இதனால் போர் முடிந்த பின்னரும் கூட அந்த துறைமுகத்தை சிலகாலம் உபயோகப்படுத்தப்பட முடியாமல் போனது.இதன் காரணமாக இந்திய கடற்படை கோக்ஸ் பஜார் துறைமுகத்தை உபயோகித்தது.

இதன் நோக்கம் பாக் இராணுவம் இதன் வழியாக பின்வாங்கி ஓட முடியாமல் செய்வது தான்.டிசம்பர் 15/16ல் மேலதிக கப்பல்கள் அனுப்பப்பட்டன.பாக் படைகள் ஓடி ஔிய எந்த வசதியையும் இந்தியப் படைகள் ஏற்படுத்தவில்லை.இந்தியக் கடற்படை கிழக்கு பாகிஸ்தானில் நடத்திய மொத்த நடவடிக்கைகளில் இரண்டு வீரர்கள் மட்டுமே வீரமரணம் அடைந்தனர்.பாக் தரப்பு நூற்றுக்கணக்கில் பெரும் இழப்பை சந்தித்திருந்தது.டிசம்பர் 17ல் முழு வங்காள விரிகுடாவும் இந்தியக் கடற்படை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

மேலும் இந்தியாவின் வான் நடவடிக்கைகளும்,ஜாக் பாட் நடவடிக்கையும், வங்கதேச கிளர்ச்சி படையுடன் இணைந்து இந்திய இராணுவப் படை நடவடிக்கைகளும் பாக்கின் கடற்படை நடவடிக்கைகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது.
பாக் கடற்படையில் இருந்த கிழக்கு பாகிஸ்தான் (வங்காளிகள்) கடற்படை அதிகாரிகள் , கடற்படையில் இருந்து விலகி அவர்களுக்கு எதிராக போரிட்டனர்.போர் முடிந்து பாகிஸ்தான் சரணடைந்த போது கிழக்கு பாகிஸ்தான் கடற்படை துடைத்து அழிக்கப்பட்டிருந்தது.மேலும் அதன் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். அதன் இயந்திரத் துப்பாக்கி கப்பல்கள்,ஒரு நாசகாரிக் கப்பல்(PNS Sylhet), ஒரு நீர்மூழ்கி ( PNS Ghazi) ஆகியவை அழிக்கப்பட்டன/ சேதப்படுத்தப்பட்டன.

இந்திய இராணுவச் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.