சோதனைகளை முடித்த அர்ஜீன் டேங்க்; விரைவில் இராணுவத்தில் இணைகிறது…!

சோதனைகளை முடித்த அர்ஜீன் டேங்க்; விரைவில் இராணுவத்தில் இணைகிறது…!

இதற்கு தயாரிக்கப்பட்ட அர்ஜீன் டேங்கில் 14 பெரிய மாறுதல்கள் செய்யப்பட்டு தற்போது அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டு விரைவில் இராணுவத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக சக்தி,அதிக திறன் மற்றும் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற இந்தியா சொந்தமாகவே மேம்படுத்திய முதன்மை கவச வாகன டேங்க் தான் இந்த அர்ஜீன்.

உத்திர பிரதேசத்தில் நடைபெற உள்ள DefExpo India 2020 ல் இந்த புதிய 68 டன்கள் எடையுடை இரும்பு அரக்கன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

இராஜஸ்தானின் மேற்கு செக்டார் பகுதியில் இந்த அர்ஜீன் டேங்க் தனது கடைசி கட்ட சோதனையை முடித்து, இராணுவத்தின் Armored Corps அர்ஜீன் படையில் இணையத் தயார் என அனுமதி அளித்துள்ளனர்.இந்த Arjun Mk-1A ஏற்கனவே தயாரிக்கப்பட்டு படையில் உள்ள 124 Arjun Mk-1 ஐ விட நவீனமானது.

இந்தியாவினுடைய டிஆர்டிஓவின் ஒரு பகுதியான சென்னையைச் சேர்ந்த  Combat Vehicles Research and Development Establishment (CVRDE) தான் அர்ஜீனின் இந்த புது அவதாரத்திற்கு காரணமானவர்கள்.மேலும் டிஆர்டிஓ இராணுவத்திடம் இருந்து ஆர்டர் பெற்றதும் ஆவடியில் உள்ள  Heavy Vehicles Factory (HVF) டேங்குகளை தயாரிக்க தொடங்கும்.

இராணுவத்தின் பல கொடூரமான சோதனைகளை அர்ஜீன் கடந்துவிட்டதாக மூத்த DRDO அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

தற்போது படையில் உள்ள அர்ஜீன் டேங்குகளை விட பெரிய 14 மாறுதல்கள் மற்றும் மொத்தமாக 72 மாறுதல்கள் செய்யப்பட்டு இந்த புதிய அர்ஜீன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

CVRDE-ன் இயக்குநர் வி பாலமுருகன் அவர்கள்கூறுகையில் ஒரு டேங்கிற்கு மிக முக்கியமானவை
 “fire power, protection மற்றும் mobility” ஆகும் (சுடும் திறன்,பாதுகாப்பு மற்றும் நகர்ந்து செல்லும் திறன்).புதிய அர்ஜீனை இந்த மூன்றிலும் மேம்பாடு செயதுள்ளோம் என கூறியுள்ளார்.

சுடும் திறனை மேம்படுத்த நான்கு முக்கிய மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.சுடுபவரின் பார்க்கும் திறனை மேம்படுத்த அவர் பார்க்கும் Main Sight (GMS) உடன் Automatic Target Tracking (ATT) இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் டேங்க் ஓடிக்கொண்டிருந்தாலும் , நகர்ந்து செல்லும் எதிரியின் இலக்கை எளிதாக கண்டறிந்து கன்னர் சுடும் பணியை எளிமையானதாக ஆக்கும்.

கமாண்டரின்  Panoramic Sight உடன்  (CPS Mk II) Thermal Imager இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இரவு மற்றும் பகல் என கண்காணிப்பில் ஈடுபட முடியும்.

மேலதிக ரக வெடிகுண்டுகள் சுடும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. conventional Fin Stabilised Armour Piercing Discarding Sabot (FSAPDS) தவிர்த்து  High Explosive Squash Head (HESH) ammunition, Thermo Baric (TB) மற்றும் Penetration Cum Blast (PCB) ஆகிய வெடிகுண்டுகள் டேங்கிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடைசியாக Remote Controlled Weapon Station இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் வீரர்கள் தரை மற்றும் வான் இலக்குகளை டேங்கிற்குள் இருந்தே தாக்க முடியும். Hatch-closed firing எனப்படும் இந்த முறை மூலம் அர்பன் பகுதியில் போரிட முடியும்.

ஒரு டேங்கில்  commander, gunner, loader மற்றும் driver என நான்கு வீரர்கள் இருப்பர்.

டேங்கின் முன்புறம் Track Width Mine Plough (TWMP) எனப்படும் அமைப்பு பொருத்தப்படும்.இதன் மூலம் கண்ணிவெடி அதிகம் உள்ள பகுதியில் கூட டேங்க் செல்ல முடியும்.முன்புறம் உள்ள அந்த அமைப்பு கண்ணிவெடிகளை டேங்கின் இருபுறமும் ஒதுக்கி விடுவதால் டேங்க் எளிதாக கண்ணிவெடி வயல்களை கடக்க முடியும்.

டேங்கில் Explosive Reactive Armour (ERA) பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது.எதிரியின் டேங்க் எதிர்ப்பு ஆயுதங்களில் இருந்து ஓரளவுக்கு டேங்கிற்கு பாதுகாப்பு கொடுக்கும்.

வேதிப் பொருள் தாக்குதலில் இருந்து டேங்கை காக்க  special chemical sensor டேங்கில் பொருத்தப்பட்டுள்ளது.டேங்க் சுற்றி வேதிப்பொருள் ஏதும் உள்ளதாக என்பதை இந்த சென்சார் கண்டறிய உதவும்.

அப்படி சென்சார் நச்சுவாயுக்கள் இருப்பதை கண்டறிந்தால் டேங்கில் எப்போதும் இருக்கும் அழுத்தம் அதிகரிக்கப்பட்டு வாயுக்கள்உள்நுழைவது தடுக்கப்படும்.மேலும் வீரர்கள் உயிர்வாழ நச்சுநீக்கப்பட்ட வாயு சிறப்பு வடிகட்டி குழாய் வழியாக வரும்.

இது போல பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.