புதிய விமானங்கள் வாங்கும் திட்டம்; பங்கேற்பாளர்களின் விமானங்களை ஒரே வருடத்திற்குள் தேர்வு செய்ய திட்டம்

புதிய விமானங்கள் வாங்கும் திட்டம்; பங்கேற்பாளர்களின் விமானங்களை ஒரே வருடத்திற்குள் தேர்வு செய்ய திட்டம்

1.5 லட்சம் கோடி செலவில் 114 பலபணி போர்விமானங்கள் இந்திய விமானப்படைக்கு வாங்கும் திட்டம் வெகு நாட்களாக இழுபட்டு கொண்டிருக்கிறது.மேலும் தாமதமாகாத வண்ணம் பங்கேற்பாளர்களின் விமானங்களை ஒரே வருடத்திற்குள் சோதனை செய்து தேர்வு செய்ய விமானப்படை முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே 126 பலபணி போர்விமானங்களுக்காக சோதனைகள் 18 மாதம் நடைபெற்று அதன் பின் ஒப்பந்தம் மேற்கொள்ள வருட தாமதம் ஆகி அதன் பின் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாமல் நிறுத்தப்பட்டது.

இந்த முறை நேரகாலவிரயத்தை தடுக்க ஒரே வருடத்திற்குள் சோதனைகள் முடிக்கப்பட உள்ளது.பங்கு பெற உள்ள விமானங்களின் திறன்கள் ஏற்கனவே பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாலும் நேரவிரயம் குறைக்கப்படும்.

இரஷ்யாவின் Sukhoi மற்றும் MiG , அமெரிக்காவின் Lockheed Martin மற்றும்  Boeing நிறுவனங்கள், ஐரோப்பாவின் Eurofighter consortium மற்றும் ஸ்வீடனிற் Saab group ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கலந்து கொள்ள உள்ளன.இந்த ஒப்பந்தம் ஆகப் பெரிய ஒப்பந்தமாக திகழ உள்ளது.

இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு விமானத் தயாரிப்பாளர்களுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்படும் விமானத்தை இந்தியாவில் தயாரிக்கும்.

MiG-21, MiG-27 என பெரிய அளவில் விமான ஸ்குவாட்ரான்கள் படையில் இருந்து வெளியேற உள்ள நிலையில் புதிய விமானங்கள் வாங்குவதற்கான தேவை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.