குண்டுதுளைக்காக உடை மேம்படுத்திய மேஜர் அனுப் மிஷ்ரா-ஸ்னைப்பர் குண்டுகளை கூட தாங்க வல்லது

குண்டுதுளைக்காக உடை மேம்படுத்திய மேஜர் அனுப் மிஷ்ரா-ஸ்னைப்பர் குண்டுகளை கூட தாங்க வல்லது

சர்வத்ரா எனப்படும் இந்த குண்டுதுளைக்காத உடை ஸ்னைப்பர் குண்டுகளை கூட தாங்க வல்லது என மேஜர் மிஷ்ரா கூறியுள்ளார்.

ஒரு இராணுவ வீரர் குண்டுதுளைக்காத உடையை மேம்படுத்தியுள்ளது ஆச்சரியமளிக்கும் விசயம் எனினும் அந்த உடை அதிதிறன் படைத்த குண்டுகளை கூட தடுத்து நிறுத்த கூடியது எனும் போது மேலும் ஆச்சரியத்தையே அளிக்கிறது.

ஒரு ஆபரேசனின் போது நான் ஒரு சினைப்பர் குண்டால் தாக்கப்பட்டேன்.குண்டு எனது குண்டு துளைக்காத உடையை துளைத்து செல்லவில்லை எனினும் எனக்கு அது அதிர்ச்சியை அளித்தது.எனவே நான் எனக்காக ஒரு குண்டு துளைக்காத உடையை மேம்படுத்த விரும்பினேன் என மேஜர் அனுப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

10மீ தூரத்தில் இருந்து வரும் ஸ்னைப்பர் குண்டை கூட இந்த உடை தாங்க வல்லது என மேஜர் கூறியுள்ளார்.

level four bullet-proof jacket-ஐ புனேவில் உள்ள மிலிட்டரி என்ஜீனீயரீங் காலேஜில் மேம்படுத்தியுள்ளோம்.இது வீரர்களுக்கு முழு உடல் பாதுகாப்பை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக மேஜருக்கு  Army Design Bureau Excellence விருதை தளபதி ராவத் அவர்கள்  Army Technology Seminar நிகழ்ச்சியின் போது வழங்கினார்.தினமும் துப்பாக்கிச்சூடுகளுக்கு மத்தியில் பணியாற்றும் எல்லையில் பணி செய்யும் வீரர்களுக்கு இந்த உடை சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

இந்த உடைகள் தொடர் தயாரிப்புக்காக இராணுவத்தின் பாதுகாப்பு நிறுவனம் ஏதேனும் ஒன்றிற்கு விரைவில் டென்டர் விடப்பட உள்ளது.

இந்த உடை இராணுவத்தால் சோதனை செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.