Breaking News

புதிக எக்ஸ்காலிபர் ஷெல்களை சோதனை செய்த இந்தியா

புதிக எக்ஸ்காலிபர் ஷெல்களை சோதனை செய்த இந்தியா 
இந்திய இராணுவம் தனது புதிய 
 Excalibur precision-guided shells களை  M777 Howitzer ஆர்டில்லரியில் இருந்து சோதனை செய்துள்ளது.
திங்கள் அன்று பொக்ரானில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த புதிய எக்ஸ்காலிபர் குண்டை அனைத்து 155 mm ஆர்டில்லரிகளில் இருந்தும் உபயோகிக்க முடியும் . இந்தியா போபர்ஸ் M777 Howitzer, K9 வஜ்ரா மற்றும் தனுஷ் ஆகிய ஆர்டில்லரிகளில் இருந்து சோதனை செய்ய முடியும்.
அமெரிக்கத் தயாரிப்பான இந்த ஆர்டில்லரி ஷெல் 48கிகி எடையும்  40கிமீ தூரம் சுடும் திறனும் கொண்டது.5-20மீ துல்லியத்தன்மையுடன் இலக்கை தாக்க கூடியது.
கனடா,ஜெர்மனி போன்ற நாடுகளும் இந்த குண்டை பயன்படுத்தி வருகின்றன.ஆபரேசனின் தன்மைக்கு ஏற்ப குண்டு 57கிமீ தூரம் வரை செல்லக்கூடியது.
குண்டுக்கு வழிகாட்ட ஐிபிஸ் வழிகாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதால் குண்டு இலக்கை 5மீ ஆரத்திற்குள் தாக்கி அழிக்கும்.
multi-function fuze அமைப்பு என்பதால் வானிலேயே வெடித்து தெறிக்க வைக்க முடியும் அல்லது கடினத்தரையை மோதியவுடன் வெடிக்க வைக்க முடியும் அல்லது கடினத்தரையை துளைத்து சென்று (பங்கர் போன்ற அமைப்புகள்) வெடிக்க வைக்க புரோகிராம் செய்ய முடியும்.
நீங்கள் ஒரு இலக்கை துல்லியமாக தாக்க விரும்புகிறீர்கள்.ஆனால் அதற்கு அருகே உங்கள் நட்பு வீரர்கள் உள்ளார்கள் எனில் உங்களுக்கு எக்ஸ்காலிபர் குண்டு சிறந்த தேர்வாக அமையும்.மற்ற வழிகாட்டாத குண்டுகள் (Unguided shells ) 10-15 குண்டுகள் தேவைப்படும் இடத்தில் ஒரு எக்ஸ்காலிபர் குண்டு போதும்.இலக்கு அழிக்கப்படுவது உறுதி.
எக்ஸ்காலிபர் உடன் அமெரிக்க வீரர்கள்
2007ல் ஈராக் போரின் போது 92% எக்ஸ்காலிபர் குண்டுகள் குறிப்பிட்ட இலக்கிற்கு 4மீ ஆரத்திற்குள்ளேயை விழுந்து இலக்கை அழித்தது.இதனால் மகிழ்ந்த அமெரிக்கா இராணுவம் இந்த ரக குண்டுகளின் தயாரிப்பை அதிகரித்தது.ஒரு குண்டின் விலையும் அதற்கேற்ப அதிகம் தான்.68,000 அமெரிக்க டாலர்கள் எனும் போது சாதாரண இலக்குகளின் மீது இந்த குண்டுகளை ஏவ முடியாது.அதிக முக்கியத்தும் வாய்ந்த ரேடார் போன்ற அமைப்புகளின் மீது ஏவமுடியும்.

Leave a Reply

Your email address will not be published.