புது வருடத்தில் படையில் இணையும் இந்தியாவின் இரகசிய ஏவுகணை கண்கானிப்பு கப்பல்

புது வருடத்தில் படையில் இணையும்
இந்தியாவின் இரகசிய ஏவுகணை கண்கானிப்பு கப்பல்

புது வருடத்தில் படையில் இணைய உள்ள இந்தியாவின் இரகசிய ஏவுகணை கண்கானிப்பு கப்பல், வெகு சில நாடுகளே இது போன்றதொரு தொழில்நுட்ப கப்பலை பெற்றுள்ளன.இந்த கப்பல் இந்திய படையில் இணையும் பட்சத்தில் இந்த ரக தொழில்நுட்பம் பெற்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவும்  இணையும்.

 US , Russia , China மற்றும் France ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே தற்போது  இந்த ரக கப்பல்களை இயக்குகின்றன.

 இந்தியாவினை் முதல்  missile tracking கப்பல் நமது  Hindustan Shipyard Limited நிறுவனத்தால் கட்டப்பட்டது.இந்த புது வருடத்தில் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2014ல் இந்தியாவின் National Technical Research Organisation ,பிரதமர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அவர்களின் நேரடி பார்வையில் இந்த கப்பல் கட்டும் பணி தொடங்கப்பட்டது.அதி இரகசியகாக இதன் பணிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புக்கு ஆகப் பெரிய உதவியாக அமைய உள்ள இந்த கப்பல் தற்போது VC 11184 என அழைக்கப்படுகிறது.

படையில் இணைவதற்கு முன் இன்னும் சில சோதனைகள் செய்யப்பட்டு இறுதியாக கடற்படைக்கு வழங்கப்பட உள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.இந்த கப்பல் கட்டும் பணி மிக வேகமாக நடைபெற்றது.இன்னும் ஒரு அல்லது இரு மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட உள்ளது.

கப்பலில் முதன்மை ரோடாராக  X band மற்றும் இரண்டாம் ரேடாராக  S band active electrically scanned array radar பொருத்தப்பட்டுள்ளது. 300 பேர்கள் இதை இயக்குவர்.வானூர்தி தரையிறங்க பெரிய தளம் மற்றும் ஏவுகணை ட்ராக் செய்ய multiple missile tracking antennas பொருத்தப்பட்டுள்ளது.

26 நாட் வேகத்தில் செல்லக்கூடியதாகவும், 10,000 டன்கள் எடையுடையதாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published.