பிரம்மோசிற்கு பிறகு அதிசக்தி படைத்த ஏவுகணை தயாரிப்பில் இந்தியா

பிரம்மோசிற்கு பிறகு அதிசக்தி படைத்த ஏவுகணை தயாரிப்பில் இந்தியா

SMART Torpedo எனப்படும் புதிய வகை தொழில்நுட்பத்தில் செயல்படும் நீர்மூழ்கிகளை அழிக்கும் டோர்பிடோவை இந்தியாவின் டிஆர்டிஓ அமைப்பு மேம்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016ல் DRDO இந்த புதிய தொழில்நுட்பத்தில் இயங்கும் Supersonic Missile Assisted Release of Torpedo (SMART) அமைப்பு மேம்படுத்த 360 கோடிகள் நிதி பெற்றது முதல் இதன் மேம்பாடு நடைபெற்று வருகிறது.மாக் 3 வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ரக ஏவுகணையான பிரம்மோசின் இணைப்பிற்கு பிறகு டிஆர்டிஓவின் திறமைக்கு மணிமகுடம் போன்றதொரு மேம்பாடாக இது இருக்கும்.

பிரம்மோஸ் இணைப்பிற்கு பிறகு இந்திய பெருங்கடலில் இயங்கும் இந்திய போர்க்கப்பல்களின் எதிரி கப்பல்களை வீழ்த்தும் திறனுக்கு புது இரத்தம் பாய்ச்சப்பட்டது போல இந்த டோர்பிடோ இணைக்கப்பட்டால் அது நீர்மூழ்கி எதிர்ப்பு திறனுக்கு புது இரத்தம் பாய்ச்சும்

அப்படி என்ன புது தொழில்நுட்பம் ?

Supersonic Missile Assisted Release of Torpedo (SMART) என்பது ஒரு ஹைபிரிட் அமைப்பாக இருக்கும்.ஒன்றுமல் நண்பர்களே ஏற்கனவே சிறப்பாக இயங்கி வரும் இரு தொழில்நுட்பங்களை இணைத்து புதுவகை தொழில்நுட்பத்தை பெறுவது ஆகும்.இதே போன்றதொரு ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்குவது தான் இந்த ஸ்மார்ட் டோர்பிடோ ஆகும்.

உலகில் தற்போது செயல்பாட்டில் உள்ள நீண்ட தூரம் செல்லும் என சொல்லப்படக்கூடிய டோர்பிடோக்களின் அதிகபட்ச தூரமாக 50கிமீ தான் உள்ளது.இவற்றுள் ராக்கெட் உதவியுடன் இயங்கக்கூடிய சில கனரக டோர்பிடோக்கள் 140-150km செல்லக்கூடியவை.ஆனால் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கூடிய இந்த  SMART டோர்பிடோ  650km வரை செல்லும்….ஆச்சரியமாக இருக்கிறதா !!

ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த டோர்பிடோ அதிக தூரம் செல்லும் மற்றும் டோர்பிடோ எதிரி நீர்மூழ்கியை நெருங்கும் வரை எதிரிகளால் டோர்பிடோவை கண்காணிக்க இயலாது.நெருங்கி வரும் வேளையில் எதிரிகள் டோர்பிடோ வருவதை அறிந்தாலும் அவர்கள் எதிர் நடவடிக்கைகள் எடுப்பதற்குள் டோர்பிடோ நீர்மூழ்கியை அடித்துவிடும்.

இயங்கும் முறை:

Supersonic Missile Assisted Release of Torpedo (SMART) அமைப்பு போர்க்கப்பல் அல்லது கடற்கரை ஓர Coastal Battery வழியாக ஏவ முடியும்.ஏவும் போது ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணைபோல பாய்ந்து கடற்பரப்புக்கு சற்று மேலே வானிலேயே பறந்து செல்லும்.
 two-way data link வழியாக போர்க்கப்பல் அல்லது  Airborne Submarine Target detection system எதிரி நீர்முழ்கி குறித்து ஸ்மார்ட் டோர்பிடோவிற்கு தகவல் வழங்கும்.இதற்கேற்ப டோர்பிடோ தனது பயணப் பாதையை மாற்றிக் கொண்டே இலக்கை துல்லியமாக தாக்கும்.அதாவது கடற்பரப்பை ஒட்டி செல்லும் ஏவுகணை நீர்மூழ்கி தனது தாக்கும் தொலைவிற்குள் வரும் போது ஏவுகணையில் இணைக்கப்பட்டிருக்கும் டோர்பிடோவை  நீருக்குள் இறக்கும்.அதன் பிறகு டோர்பிடோ மிக விரைவாக நீருக்குள் சென்று எதிரி நீர்மூழ்கியை தாக்கும்.

இந்த ஸ்மார்ட் அமைப்பு ஏற்கனவே உள்ள சூப்பர்சோனிக் ஏவுகணையில் சில மாற்றங்கள் செய்து இந்தியா ஏற்கனவே மேம்படுத்தி வைத்துள்ள அதிநவீன  LWT (ALWT) light-water டோர்பிடோவை ஏந்தி செல்லும் வகையில் தயாரிக்கப்படும் என கூறப்பட்டாலும் இந்த திட்டம் அதிரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன LWT torpedo 30கிமீ தூரம் வரை செல்லக்கூடியது.இதை ஏந்தி செல்ல வல்ல சூப்பர்சோனிக் ஏவுகணை 600கிமீ வரை செல்லக்கூடியதாய் இருக்கும்.

சீனா இதே போன்ற  Yu-8 ASW missile என்ற ஏவுகணையை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுவும் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்ககூடியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் இது 40km வரை தான் செல்லக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published.