இது தென்சீனக் கடல் அல்ல..மர்மமான சீனக்கப்பலை விரட்டி அடித்த இந்திய கடற்படை

இது தென்சீனக் கடல் அல்ல..மர்மமான சீனக்கப்பலை விரட்டி அடித்த இந்திய கடற்படை

இந்தியாவின் போர்ட் பிளேர் பகுதியில் சுற்றிய மர்மமான சீனக் கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை விரட்டி அடித்துள்ளது.

சீன research vessel Shi Yan 1 எனப்படும் அந்த கப்மல் அந்தமான் மற்றும் நிக்கோபர் கடற்பகுதியில் உள்ள போர்ட் பிளேர் பகுதியில் ஆராய்சி பணிகளை மேற்கொண்டு வந்ததை இந்திய கடற்படையின் கடற்சார் ரோந்து விமானம் கண்டறிந்தது.

இந்திய பெருங்கடல் மற்றும் தென் ஆசிய பகுதியில் இந்திய போர்க்கப்பல்களின் நடமாட்டம் குறித்து சீனக் கப்பல் உளவு பணிகளில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.

இந்திய ஏஜென்சிகளால் இந்த கப்பல் கண்டறியப்பட்டு, அந்த கப்பல் இந்தியாவின் Exclusive Economic Zone பகுதியை உளவு பார்ப்பது கண்டறியப்பட்டு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் அங்கு அனுப்பப்பட்டு அந்த சீனக் கப்பலின் நடமாட்டம் குறித்து அறிய அனுப்பப்பட்டது.

இந்தியாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் எந்த ஆராய்ச்சி பணிகளும் மேற்கொள்ள வெளிநாட்டு கப்பல்களுக்கு அனுமதி இல்லாததால் அந்த சீனக் கப்பலை இந்திய கடற்பகுதியை விட்டு வெளியேற்ற இந்திய போர்க்கப்பலுக்கு உத்தரவு பறந்தது.

இந்திய போர்க்கப்பல் மிரட்டலை அடுத்த அந்த சீனக் கப்பல் இந்திய கடற்பகுதியை விட்டு வெளியேறியது.ஆனால் அது எதை நோக்கி சென்றது என்ற தகவல் இல்லாவிட்டாலும் சீனாவை நோக்கி சென்றிருக்கலாம் என தகவல் வெளியானது.

மலாக்கா நீரிணை பகுதி வழியாக இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது முதல் அந்த கப்பலை இந்திய கடற்படை கண்காணித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன் இந்திய கற்படையின் P-8I maritime surveillance aircraft இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணித்தது.

 கடற்கொள்ளை எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய கடற்பகுதியில் சீனக் கப்பல் நுழைகிறது என சீனத் தரப்பு கூறினாலும் கடற்கொள்ளை எதிர்புக்கும் அணுசக்தி நீர்மூழ்கி இங்கு வருவதற்கும் என்ன சம்பந்தம் என இந்தியா எதிர்கேள்விகள் கேட்கிறது.

Leave a Reply

Your email address will not be published.