ஆறு அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கி கட்ட கடற்படை திட்டம்
18 கன்வென்சனல் மற்றும் 6 அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கிகள் கட்ட இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கட்டப்பட்டு வரும அணுசக்தியில் இயங்கும் மற்றும் அணு ஏவுகணைகளை சுமந்து செல்லக்கூடிய Arihant Class SSBN உடன் ஆறு அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கிகள் கட்டப்பட உள்ளன.தனியார் நிறுவனங்கள் உதவியுடன் இந்த புதிய ஆறு நீர்மூழ்கிகள் இந்தியாவிலயே கட்டப்படும்.
Russian-origin Kilo Class, German-origin HDW class மற்றும் French Scorpene-class என மூன்று ரக கன்வென்சனல் நீர்மூழ்கிகளை இயக்கி வருகிறது கடற்படை.அணு சக்தி என்ற வகையில் சக்ரா எனும் ஒரே நீர்மூழ்கி தான் இரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 15 வருடங்களில் வெறும் இரு கன்வென்சனல் நீர்மூழ்கிகள் மட்டுமே கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
மற்றும் தற்போது படையில் உள்ள 13 கன்வென்சனல் நீர்மூழ்கிகளும் 17 முதல் 31 வருடங்கள் பழமையானவை.
ஸ்கார்பின் ரகம் தவிர்த்து பி-75ஐ திட்டத்தின் கீழ் மேலதிக ஆறு நீர்மூழ்கிகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.