இராணுவத்திற்கு புதுவருட பரிசு: புதிய ஆறு அப்பாச்சி வாங்க முடிவு

இராணுவத்திற்கு புதுவருட பரிசு: புதிய ஆறு அப்பாச்சி வாங்க முடிவு
இராணுவத்திற்கு புதிய ஆறு அப்பாச்சி தாக்கும் வானூர்திகள் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் இராணுவம் முதல்முறையாக தனது படையில் தாக்கும் வானூர்திகளை இணைக்க உள்ளது.
930மில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தம் 2020ல் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. US foreign military sales திட்டத்தின் கீழ் இந்த புதிய அப்பாச்சி வானூர்திகள் வாங்கப்பட உள்ளன.
ஒப்பந்தம் 2020ல் கையெழுத்தாகும் பட்சத்தில் 2022ல் புதிய வானூர்திகள் இந்தியா வரும்.fire-and-forget Hellfire missiles உடன் அப்பாச்சி 128 இலக்குகளை கண்காணித்து முக்கிய இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்கும் வல்லமை பெற்றது.
இனி தாக்கும் நடவடிக்கைகளுக்கு இராணுவம் விமானப்படையை எதிர்பார்க்க வேண்டியதில்லை.இந்தியா ஏற்கனவே 3.1 பில்லியன் டாலர் செலவில்  22 Apache helicopters மற்றும் 15 Chinook heavy-lift choppers வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.