இரஷ்ய தொழில்நுட்பங்களை திருடும் சீனா- கோபத்தில் இரஷ்யா
தொழில்நுட்ப திருட்டு குறித்து வெளியில் பொதுப்படையாக அறிவிப்பது மிக அரிதானது எனினும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.ஆம்,இரஷ்யாவின் பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிறுவனமான ரோஸ்டெக் தொழில்நுட்ப திருட்டு குறித்து சீனா மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது.
கடந்த 17 வருடங்களில் 500க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக ரோஸ்டெக்கின் intellectual property projects தலைவர் தெரிவித்துள்ளார்.
aircraft engines, Sukhoi planes, deck jets, air defense systems, portable air defense missiles மற்றும் analogs of the Pantsir medium-range surface-to-air systems ஆகிய தொழில்நுட்பங்களை சீனா திருடி/காப்பி அடித்துள்ளாதாக ரொஸ்டெக் தெரிவித்துள்ளது.மேலும் இவற்றை ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்து வெளிநாடுகளுக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது.
சீனா தனது 70% தளவாடங்களை 2014-18 ஆண்டுகளில் இரஷ்யாவிடமே இறக்குமதி செய்துள்ளது.ஆறு S-400 anti-aircraft systems மற்றும் 24 Su-35 fighter jets என பல பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்கிறது.
இனி சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தளவாடங்களை குறைக்க உள்ளதாக இரஷ்ய வட்டாரங்கள் கூறுகின்றன.” உங்கள் உழைப்பை உங்கள் அனுமதி இல்லாமல் திருடுவது தவறு” என இரஷ்யாநினைக்கிறது.
1990களில் சீனா இரஷ்யாவிடம் இருந்து Su-27 fighter jets மற்றும் S-300 missile systems இறக்குமதி செய்தது.இவற்றை அப்படியே காப்பி செய்த சீனா அவற்றை J-11 fighter jet மற்றும் HQ-9 surface-to-air missiles ஆக காப்பி செய்தது.