கலோனல் ஹொஷியர் சிங் தாகியா
ரேக்டாட்-சோனிபட் ரோட்டில் அமைந்துள்ள சிசானா என்னும் கிராமத்தில் மே5, 1937ல் பிறந்தார்.அவருடைய தந்தை ஹிரா சிங் மதப்புமிக்க விவசாயி யாகவும் தாய் கனிவான மனங்கொண்டவராகவும் இருந்தார். அவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போது தன்னோ தேவி என்பவரை மணமுடித்தார் அவர்களுக்கு மூன்று மகன்கள்.
அவரது பள்ளி கல்வியை தன் சொந்த ஊரிலேயே முடித்தார். ஜாட் கல்லூரியில் ஒரு வருட படிப்பிற்க்கு பிறகு இந்திய இராணுவத்தில் சேர்ந்தார்.
ஜீன் 30, 1963ல் அவர் 3வது கிரனேடியர்ஸ் ரெஜிமெண்ட்டில் வீரராக NEFA ல் நியமிக்கப்பட்டார். அவர் ஒரு இளம் அதிகாரியாக 1965 இந்தோ – பாக் போரில் கலந்து கொண்டார்.
1971இந்தோ – பாக் போரில் 3வது
கிரனேடியர்ஸிடம் ஷகார்கர் செக்டரில் உள்ள பசாந்தர் என்னும் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இதன் இருபுறமுமே பதுங்கு குழிகள் மற்றும் கன்னிவெடிகளால் ஆன ஆபத்து நிறைந்து இருந்தது.அதில் பாகிஸ்தான் படையினர் சூழ்ந்து இருந்தனர்.
பாகிஸ்தான் படையால் கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த ஜார்பில் என்னும் இடத்தை கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட சி கம்பெனியில் கமாண்டிங் அதிகாரியாக ஹொசியர் சிங் அவர்கள் இருந்தார் .அந்த இடம் எதிரி நிலைகளால் அரணமைக்கப்பட்டிருப்பதால் கம்பெனி மீடியம் மிஷின் கண்களை கொண்டு ஷெல் தாக்குதல் நடத்த முடிவு செய்தது.
மன தைரியம் மிக்க மேஜர் சிங் தன் படைக்கு தலைமை தாங்கி சண்டையில் எதிரி இராணுவத்துடன் நேரடி சண்டையில் ஈடுபட்டார். டிசம்பர் 16 ,1971 இல் எதிர் இராணுவம் பேராயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல் நடத்தியது.
பெரும் தாக்குதல்களுக்கும் குண்டு மழை பொழிவிற்கும் மத்தியில் மேஜர் சிங் அவர்கள் அகழியிலிருந்து அகழி தாண்டி தன் படையினருக்கு ஊக்கம் கொடுத்து சண்டையிடச் செய்தார்.அவருடைய இடைவிடாத ஊக்குவிப்பு மற்றும் சரியான தலைமையின் காரணமாக அவரின் படை வீரத்துடன் சண்டையிட்டு எதிரிகளின் பக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
டிசம்பர் 17 இல் மீண்டும் எதிரிப்படையினர் ஆர்ட்டில்லரி சுடுதல் உதவியுடன் கூடிய பட்டாலியன்களின் பின்புலத்துடன் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மேஜர் சிங் அவர்களுக்கு பெரும் காயங்கள் ஏற்பட்டன. அதை பொருட்படுத்தாது தன் படைகளை ஊக்குவித்து எதிர்தாக்குதல் நடத்த செய்தார். இந்த தாக்குதலிலும் எதிரிப் படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்தக் எதிர் தாக்குதல் வெற்றிகரமாக நடைபெற்றது.
எதிரிப்படைகளின் கமாண்டிங் அதிகாரி உட்பட 85 பேர் மாண்டனர். மீதம் இருந்தவர்கள் பின்வாங்கி விட்டனர். மேஜர் சிங் அவர்களுக்கு இந்த வீர தீர மிக்க செயல் மற்றும் பணியில் பயபக்தி போன்ற காரணங்களுக்காக ராணுவ உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது .அவர் கலோனலாக ராணுவத்திலிருந்து பணி ஓய்வு பெற்றார் டிசம்பர் 6 1998 இல் இதய நோய் காரணமாக மரணம் எய்தினார்.
வீரவணக்கம்