என்ஜின் ஆன்…!! அடுத்த கட்ட சோதனைக்கு தயாராகும் இந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த்
கொச்சியில் கட்டப்பட்டு வரும் இந்தியா சொந்தமாக கட்டி வரும் முதல் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த்தின் என்ஜின்களை இயக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது.
அடுத்து basin trials-களுக்கு உட்படுத்தப்பட்டு 2022ம் ஆண்டு வாக்கில் படையில் இணையும் என கூறப்படுகிறது.
2018-க்குள் முடிக்கப்பட்டு படையில் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய போர்க்கப்பல் தற்போது வரை கால தாமதமாகி வருகிறது.37,500 டன்கள் எடையுடைய இந்த விமானம் தாங்கி கப்பல் முதலில் மிக்-29கே விமானங்களை தாங்கி செல்லும் என கூறப்பட்டது.இனி வரும் காலத்தில் இந்தியா சொந்தமாக தயாரிக்கும் விமானமும் பறக்க வாய்ப்புள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்திய தளங்களில் இதுவரை கட்டப்பட்டதிலேயே ஆகப் பெரிய கப்பலான இந்த விக்ராந்தில் தேஜஸ் தயார் ஆன பிறகு இடம்பெற வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் கடற்படை இரட்டை என்ஜின் உள்ள விமானத்தை எதிர்பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது விக்ரமாதித்தயாவில் மிக்-29 விமானங்கள் மட்டும் தான் பறந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் தாங்கி கப்பலில் விமானத்தை தறையிறக்குவது கடினமான பணி.அப்படி விமானம் பறக்கும் போதாே அல்லது இறங்கும் போதோ ஒரு என்ஜின் செயலிழந்தால் கூட மற்றொரு என்ஜின் உதவியுடன் தரையிறக்க முடியும்.இதே தேஜஸ் போல ஒற்றை என்ஜின் என்றால் சிரமமே.
2021ல் கடற்படை கப்பலை பெற்றாலும் 2022ல் தான் படையில் இணையும்.அதில் MiG 29K fighter jets தான் முதலில் ஏவப்படும்.
2003ல் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு இன்று வரை விக்ராந்த கட்டி முடிக்கப்படாமல் உள்ளது.