எல்லையில் சண்டை எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம்: இராணுவ தளபதி ராவத்

எல்லையில் சண்டை எந்த நேரத்திலும் அதிகரிக்கலாம்: இராணுவ தளபதி ராவத்

எல்லையில் பிரச்சனை எந்நேரத்திலும் அதிகரிக்கலாம் என இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப நாம் தயாராவது அவசியம் என தளபதி கூறியுள்ளார்.

ஆகஸ்டில் ஆர்ட்டிகிள் 370 நீக்கத்திற்கு பிறகு எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச் சூடு அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

யூனியன் மினிஸ்டர் கிசான் ரெட்டி அவர்கள் லோக் சபாவில் கூறிய போது இந்த ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை மட்டுமே 950 முறை துப்பாக்கிசூடு நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக் தாக்கியுள்ளது என கூறியுள்ளார்.

கடந்த திங்கள் அன்று கூட காஷ்மீரின் சுந்தர்பனி செக்டாரில் பாக்கின்  Army Special Service Group வீரர்கள் இந்திய வீரர்களை தாக்கினர்.இதற்கு இந்தியா அளித்த பதிலடியில் இரு பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டனர்.

ஆனால் நம் பக்கம் 21 வயதே ஆன வீரர் சுக்விந்தர் சிங் வீரமரணம் அடைந்தார்.

பாக் இராணுவத்திற்கு முடிந்த அளவு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது.

வீரர் சுக்விந்தர் அவர்கள் பஞ்சாபை சேர்ந்தவர்.

Leave a Reply

Your email address will not be published.