போர்க்கப்பல்கள் கமாண்டர்கள் தேவை : அதிக விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் சீன கடற்படை
சீனா புதிதாக மேம்படுத்தியுள்ள J-15 விமானங்களை இயக்கவும், புதிய போர்க்கப்பல்களை கமாண்ட் செய்ய அதிக வீரர்களுக்கு சீனக் கடற்படை பயிற்சி அளித்து வருகிறது.இதன் மூலம் புதிய விமானம் தாங்கி கப்பல்களுக்கு அதிக திறன் கொண்ட commanding officer-களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.
சீனாவிடம் தற்போது ஒரே விமானம் தாங்கி கப்பல் தான் உள்ளது. Liaoning எனப்படும் அந்த கப்பல் பழைய சோவியத் கால கப்பலை மாற்றி கட்டப்பட்டு கடந்த 2012ல் படையில் இணைத்தது சீனா.
இணைத்தது முதலே அந்த கப்பலை பயிற்சி சார் பணிகளுக்காகவே பெருமளவு உபயோகித்துவருகிறது சீனா.அதாவது விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து இயக்க கூடிய J-15 என்ற விமானத்தை லயோனிங் விமானம் தாங்கி கப்பலில் இருந்து சோதித்து வந்தது.இதன் மூலம் தான் கட்டி வரும் புதிய விமானம் தாங்கி கப்பல்களுக்கான அதிகாரிகள் ,வீரர்களை உருவாக்கி வருகிறது.
மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் தற்போது கட்டுமானத்தில் இருக்கும் நேரத்தில் இரண்டாவது கப்பல் இன்னும் சில காலத்தில் படையில்இணைய உள்ளது.
சாங்காய் பகுதியில் பெரிய aircraft carrier factory ஒன்றை சீனா ஏற்படுத்தி உள்ளது.இங்கு இதே போல பெரிய பல கப்பல்கள் கட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா ஐந்து முதல் ஆறு விமானம் தாங்கி கப்பல்களை கட்ட உள்ளது.
அவற்றை கட்டவும் பராமரிக்கவும் இதுபோன்றதொரு பெரிய கட்டுமானம் தேவையாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
விமானம் தாங்கி கப்பலில் இருந்து விமானத்தில் பறக்கும் திறன் கொண்ட விமானிகள் தற்போது போர்க்கப்பல்கள் இயக்கி அவற்றை கமாண்ட் செய்வது குறித்தும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் எதிர்காலத்தில் திறன் பெற்ற விமானம் தாங்கி கப்பலை இயங்கும் கமாண்டர்கள் சீனக் கடற்படைக்கு இருப்பர் என்பது இராணுவ வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.