பாக் சரணடைந்ததில் முக்கிய பங்காற்றிய லெப் ஜென் ஜேகப்

லெப் ஜென் ஜேகப்

1924ல் கொல்கத்தாவில் பிறந்தவர் லெப் ஜென் ஜேகப்.1971ல் வங்கதேச விடுதைப்போரில் சிறப்பாக செயல்பட்டமைக்காக இந்த யூத இந்திய இராணுவ அதிகாரி பெரும்பாலும் நினைவு கூறப் படுகிறார்.அப்போது இந்திய இராணுவத்தின் கிழக்கு கட்டளையக பிரிவின் மேஜர் ஜெனரலாக இருந்தார்.தனது 36வருட இராணுவ வாழ்க்கையில் இரண்டாம் உலகப் போர்,1965 போர் என இந்தியாவிற்கு சேவை செய்தார்.
அதன் பிறகு பஞ்சாப்,கோவா மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்தார்.
பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் இருந்ந போது ஈராக், துனிசியாவில் உலகப் புகழ் இர்வின் ரோமல் படைகளுக்கு எதிராக என பல முனைகளில் போரிட்டுள்ளார்.அதன் பிறகு பர்மா,சுமத்ரா முனைகளில் ஜப்பான் படைகளுக்கு எதிராக போரிட்டுள்ளார்.போர் முடிவுற்றவுடன் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில்  அதிநவீன ஆர்டில்லரி மற்றும் ஏவுகணைகள் குறித்த பயிற்சியில் தேர்வு பெற்று  அதன் பிறகு பிரிவினைக்கு பின்பு இராணுவத்தில் இணைந்தார்.
1963ல் பிரைகேடியராக பதவி உயர்வு பெற்றார்.1965 போரில் இராஜஸ்தானில் 12வது இன்பான்ட்ரி டிவிசனை வழிநடத்தினார்.இந்தக் காலத்தில் தான் அவர் பாலைவனப் பகுதி போர்முறை குறித்த மேனுவலை தயாரித்தார்.அதன் பிறகு 1967ல் மேஜர் ஜெனராக பதவி உயர்வு பெற்றார்.1969ல் பீல்டு மார்சல் சாம் மனேக்சா இவரை கிழக்கு கட்டளையக தளபதியாக நியமித்தார்.அதன் பிறகு வடகிழக்கில் தலைதூக்கிய தீவிரவாதத்தை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டார்.
அதன் பிறகு தான் 1971போர் தொடங்கியது.கிழக்கு பகுதியில் வெற்றிகரமாக போர் நடவடிக்கை நடத்தப்பட்டது.அதற்காக அவருக்கு commendation of merit விருது வழங்கப்பட்டது.1971 மார்ச்சில் கிழக்கு பாக்கில் (இப்போதைய வங்காளதேசம்) சர்ச்லைட் நடவடிக்கையை தொடங்கியபோது 10லட்சம் பேர் அகதிகளாக இந்தியா வந்தடைந்தனர்.இது இந்தியாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது.ஜேகப் அவர்கள் ஏற்படவிருந்த போருக்கு முன்னரே தயாரானார்.உயரதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு போருக்கு தயாரானார்.அதிரடியாக கிழக்கு பாக் புகுந்து தாக்க தான் திட்டம் தீட்டப்பட்டு கிழக்கு தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆனால் வங்கதேசத்தின் நிலப்பரப்பு , மூன்று பறந்த ஆறுகள் மற்றும் சதுப்புநிலப் பகுதிகள் காரணமாக நாம் போர் தொடங்கி வேகமாக சென்றுவிட முடியாது மற்றும் ஐநா தலையிடக் கூடும் என ஜேகப் அவர்கள் இந்த திட்டத்தில் உடன்பாடு இல்லை என்றார்.சீனா வேறு தலையிடக் கூடும்என எண்ணினார்.மேலும் ஒவ்வொரு நகரமாக வீழ்த்தி செல்வது எளிதான காரியம் அல்ல.அதற்கு பதிலாக மொத்தமாக பாக்கின் அனைத்து இராணுவ நடவடிக்கையின் தலைமை நகரமாக டாக்காவை தாக்க வேண்டும் என கூறினார்.இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
பாக்கின் (கிழக்கு) தொலைத்தொடர்பு மற்றும் தலைமையகங்கள் அழிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன.
முக்கிய இராணுவ தளங்கள் கைப்பற்றப்பட்டன.முழு வெற்றி தான்.போரை தொடர்ந்து நடத்துவது மற்றும் வங்கதேசத்தை இந்தியாவுடன் இணைப்பது இதேல்லாம் இந்தியாவின் விருப்பமாக இருக்கவில்லை. டிசம்பர் 16 இரவு ஜேகப் அவர்கள் பாக் தளபதி நியாசியை சந்திக்க அனுமதி பெற்று அவரை சந்தித்து சரணடைய வேண்டி மிரட்டினார். சரணடையவில்லையெனில் பாக்கில் உள்ள அனைத்து வீரர்களும் கொல்லப்படுவர் என மிரட்டினார். 
அவருக்கு வெற்றி கிடைத்தது.90,000 வீரர்களோடு பாக் சரணடைந்தது.அந்த நேரத்தில் டாக்காவில் மட்டும் 26400 பாக் வீரர்கள் இருந்தனர்.ஆனால் அங்கு வெறும் 3000 இந்திய வீரர்கள் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.பாக் தேசிய பாதுகாப்பு கல்லூரி இன்று வரை இந்த வெற்றிக்கு ஜேகப் தான் காரணம் ,அவரது தீர்ந்த, சீரான , தந்திர இராணுவ நடவடிக்கை வெற்றிக்கு காரணம் என புகழ்கிறது.1979ல் இராணுவத்தில்  இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு பஞ்சாப் மற்றும் கோவா மாநிலத்தில் கவர்னராக பதவி வகித்தார்.
நிமோனியா காரணமாக டெல்லியில் இராணுவ மருத்துவமனையில் 13 ஜனவரி 2016ல்  காலை 8:30மணி அளவில் மரணம் அவரை தழுவ அனுமதித்தார்.டெல்லியிரல் உமாயூன் சாலையில் யூதர்கள் தகனம் செய்யுமிடத்தில் இறுதி சடங்குகள்நடைபெறறு நிம்மதியாக உறங்குகிறார்.
Surrender at Dacca: Birth of a Nation
An Odyssey in War and Peace: An Autobiography Lt Gen. J.F.R. Jacob
என இரு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இன்று பாக்கிஸ்தான் கிழக்கு வங்கத்தில் சரணடைந்த நாள்..

Leave a Reply

Your email address will not be published.