Breaking News

தரையிறங்கு போர்க்கப்பலை கடற்படைக்கு டெலிவரி செய்த கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம்

தரையிறங்கு போர்க்கப்பலை கடற்படைக்கு டெலிவரி செய்த கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம்

இந்தியக் கடற்படையின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு கொல்கத்தாவில் உள்ள
கப்பல் கட்டும் தளமாக Garden Reach Shipbuilders and Engineers (GRSE) தான் கட்டிவந்த Landing Craft Utility (LCU)-ஐ கடற்படைக்கு டெலிவரி செய்துள்ளது.

முதன்மை போர் கவச டேங்குகள்,கவச வாகனங்கள்,வீரர்கள் மற்றும் மற்ற தளவாடங்களை நீரில் இருந்து நிலத்தில் தரையிறக்க இந்த கப்பல்கள் உதவும்.மற்ற நாட்டை தாக்கி கைப்பற்றவோ அல்லது தீவுப்பகுதிகளில் டேங்குகளை தரையிறக்கவோ இந்த கப்பல்கள் உதவும்.

GRSE கடற்படைக்காக கட்டிவரும் இதுபோன்ற எட்டு கப்பல்களில் இது ஏழாவது கப்பல் ஆகும்.

beaching operations, தேடுதல் மற்றும் மீட்பு , பேரிடர் மீட்பு ,சப்ளை மற்றும் replenishment , தொலைதூர தீவுகளில் இருந்து மீட்பு ஆகிய நடவடிக்கைகளுக்காக இந்த கப்பலை உபயோகிக்கலாம்.

 LCU கப்பல் 62.8மீ நீளம் மற்றும் 11மீ அகலமும், 830 டன்கள் நீளமும் கொண்டது.

 15 knots வேகத்தில் செல்லக்கூடியது.கப்பலில் இரு CRN 91 துப்பாக்கிகள் உள்ளன.இவை வீரர்கள் கப்பலில் இருந்து தரையிறங்கும் போது பாதுகாப்பு அளிக்கும்.

LCU Mark IV ரக கப்பல்களில் முதல் கப்பல் 2016ல் படையில் இணைக்கப்பட்டது.இந்த கப்பல்கள் 90% இந்தியத் தயாரிப்பு.

1960 முதல் இதுவரை 103 கப்பல்களை கார்டன் ரீச் தளம் கட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.