இரஷ்யாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலில் தீ விபத்து
இரஷ்யாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான அட்மிரல் குஸ்நெட்ஸ்தோவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாரியுள்ளது.இரஷ்ராயாவின் ஆர்டிக் கப்பல் துறைமுகத்தில் பழுது நீக்கும் பணியின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தாலும் 2 பேரை காணவில்லை என்ற இரஷ்ய செய்தி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த அக்டோபர் 2018ல் குஷ்நெட்ஸ்தோவ் PD-50 drydock-ல் சில பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த போது ட்ரைடொக்கில் நீர் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.இதில் ஐந்து பே ர் காயமடைந்தனர்.அதன் பின் அங்கிருந்து அருகே உள்ள 35th Ship Repair Plant-க்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் இந்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
எவ்வளவு தூரம் கப்பல் பாதிக்கப்பட்டுள்ளது என தகவல் இல்லை.கப்பலின் புரோபல்லர் அமைப்பில் தான் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.கப்பலில் இருந்த எட்டு turbo-pressurized boiler-களில் நான்கு மாற்றம் செய்து மற்றவற்றின் குறைகள் நீக்கம் செய்ய தான் கப்பல் அங்கு கொண்டு செல்லப்பட்டது.
கப்பல் சேதம் அதிகம் இருப்பின் இனி அது மீண்டும் கடலை காணாமலே போகலாம்.