- பலத்தை பெருக்கும் கடற்படை..!! ஐஎன்எஸ் அரிகத் விரைவில் சேர்ப்பு
இந்தியா உள்நாட்டிலேயே சொந்தமாக கட்டி வரும் இரண்டாவது அரிகந்த் வகை அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் அரிகத் தனது அனைத்து சோதனைகளையும் முடித்துள்ளதாகவும், விரைவில் படையில் இணையும் என்ன தகவல் வெளியாகியுள்ளது.
2020ல் ஏதேனும் ஒரு மாதத்தில் படையில் அரிகத் இணைக்கப்படும்.இந்த மொத்த அரிகந்த் ரக நீர்மூழ்கிகள் கட்டும் திட்டம் அதிரகசியமாகவே உள்ளது.அரிகந்த இரகசியமாக படையில் இணைக்கப்பட்டு தற்போது இரண்டாம் கப்பலும் அதிரகசியமாக கட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டு அடுத்த வருடம் இரகசியமாகவே படையில் இணைய வாய்ப்புள்ளது.2017 கடற்சோதனைகளுக்காக அரிகத் நீருக்குள் ஏவப்பட்டு தற்போது சோதனைகளை முடித்துள்ளது.
INS Arighat அரிகந்தை போலவே 6000 டன்கள் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டாலும் ஆனால் அது அரிகந்தை விட பெரியதாகவும் அரிகந்தை விட அதிக பலிஸ்டிக் ஏவுகணைகளை சுமந்து செல்லும் எனவும் கூறப்படுகிறது.
அரிகத் தவிர S4 & S4* எனப்படும் மேலும் இரு நீர்மூழ்கிகள் கட்டப்பட்டுவருகிறது.தற்போது உள்ள நீர்மூழ்கியை விட 1000+ அதிக எடையுடன் இந்த நீர்மூழ்கிகள் கட்டப்படும்.