இராணுவத்தில் அதிகாரிகளாக இணைய ஆர்வம் காட்டாத இளைஞர்கள்; அதிகாரிகள் பயிற்சி மையத்தை மூட உள்ள இராணுவம்

இராணுவத்தில் அதிகாரிகளாக இணைய ஆர்வம் காட்டாத இளைஞர்கள்; அதிகாரிகள் பயிற்சி மையத்தை மூட உள்ள இராணுவம்

இராணுவத்தில் அதிகாரிகளாக இளைஞர்கள் இணைவது குறைந்து வருவது காரணமாக கயாவில் இயங்கி வரும் அதிகாரிகள் பயிற்சி மையம் விரைவில் மூடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயற்சி மையத்திற்கு பிறகு பீகாரின் கயாவில் அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.வருடத்திற்கு 750 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் திறன் கொண்ட இந்த மையத்தில் தற்போது வெளிநாட்டு வீரர்கள் உட்பட வெறும் 250 வீரர்கள் தான் பயிற்சி பெற்றுவருகின்றனர்.

டேராடூனில் உள்ள Indian Military Academy (IMA) மற்றும் சென்னையின்  OTA இவ்விரண்டும் பயிற்சி மையமாக உள்ளன.சென்னை பயிற்சி மையத்தில் கூட அதிக வீரர்கள் பயிற்சி எடுக்கலாம் என்ற நிலையில் அங்கும் குறைவான அளவே பயிற்சி எடுக்கின்றனர்.

கயா பயிற்சி மையம் மூடப்பட்டு அங்கு தற்போது உத்திரப்பிரதேசத்தின் பதேகரில் செயல்பட்டு வரும் சீக் லைட் இன்பான்ட்ரி ரெஜிமென்டின் தலைமையகம் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1999 கார்கில் போருக்கு பிறகு அதிக இளைஞர்கள் படையில் அதிகாரிகளாக இணைவர் என நினைத்த இராணுவம் கடந்த 2011ல் கயாவில் பயிற்சி மையத்தை திறந்தது.ஆனால் தற்போதுள்ள நிலை மற்றும் செலவு சார் நிலை காரணமாக மூட உள்ளது.அதற்காக செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கயாவில் இதுவரை பூடான்,வியட்நாம் ,மியான்மர் என 70 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.IMA மட்டுமே 1,650 வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் என்ற நிலையில் அங்கு 1,300 வீரர்கள் தான் பயிற்சி பெறுகின்றன.

13 லட்சம் வீரர்கள் கொண்ட இராணுவத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை என்பது நீண்ட நாட்களாகவே உள்ளது.50312 அதிகாரிகளுக்கு 7400 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது.

இளைஞர்களிடையே இந்திய இராணுவம் அதிகாரிகளாக ஆவது குறித்த ஆர்வத்தை தூண்டவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.சில இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இராணுவத்தில் இணைய அனுமதிப்பதில்லை என்ற தகவலும் உள்ளது.பல காரணங்களால் இளைஞர்கள் அதிகாரிகளாக இணைவது குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.