இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய-பிரான்ஸ் கடற்படைகள் இணைந்து ரோந்து மேற்கொள்ள திட்டம்….!
ஆபரேசன் அளவில் இரு நாடுகளும் இணைந்து விரைவில் கையெழுத்திட உள்ளனர்.இதன் மூலம் இரு நாடுகளும் இணைந்து இந்திய கடற்பகுதியில் இணைந்து ரோந்து பணிகள் மேற்கொள்ள உள்ளதாக பிரான்ஸ் கடற்படை அதிகாரி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய பிரான்ஸ் அதிகாரி
Vice Admiral Didier Malterre இந்திய பகுதியில் வளர்ந்து வரும் சீனா ஆதிக்கத்தின் அச்சுறுத்தல் பற்றி பேசியுள்ளார்.இது தவிர கடற்கொள்ளையர்கள் எதிர்ப்பு ஆபரேசன் என்ற பெயரில் சீனா அணுசக்தி நீர்மூழ்கிகளை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்புவதும்,இலங்கையில் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை இரு வகையிலும் சீன் பயன்படுத்த முனைவது குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இணைந்து ஆபரேசன்கள் செய்ய விரும்புகிறோம்.வெறும் இணைந்த போர் பயிற்சிகள் மட்டும் அல்ல” .கடற்சார் கண்கானிப்பு பணிகள் முதல் சென்சிடிவ் ஆபரேசன்கள் வரை இணைந்து செயல்பட விரும்புகிறோம்.அதற்காக பாதுகாப்பான தொலைத்தொடர்பு குறித்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளோம்.இதற்கென இந்தியாவுடன் இன்னும் இணைந்து ஆழமாக செயல்பட உள்ளோம் என மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.இதற்கென பிரான்ஸ் இராணுவ அமைச்சர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.
இந்தியாவின் P8I maritime surveillance விமானம் உடன் பிரான்சின் ரீயூனியன் தீவில் செயல்படும் பிரான்ஸ் கடற்படை பிரிகேட் கப்பலுடன் அடுத்த வருடம் முதல் இந்திய பெருங்கடல் பகுதியிலும் strategic Mozambique Channel பகுதியிலும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
நேட்டோ உறுப்பினர் அல்லாத நாட்டுடன் பிரான்ஸ் நெருக்கம் காட்டுவது அரிது தான்.