பாரக்-8 ஏவுகணை: மிக முக்கியத்துவம் வாய்ந்த சக்தி மிகு ஏவுகணை குறித்த தகவல்கள்

பாரக்-8 ஏவுகணை: மிக முக்கியத்துவம் வாய்ந்த சக்தி மிகு ஏவுகணை குறித்த தகவல்கள்

ஆகாஷ் மற்றும் திரிசூல் மேம்பாட்டு திட்டங்கள் பின்னடைவில் இருந்த நேரத்தில் வான் பாதுகாப்பு- SAM (surface to air missiles) ஏவுகணைக்கான தேவை இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அதிகரித்தே வந்தது.

அந்த நிலையில் இந்தியா தனது அனைத்து காலநிலை நட்பு நாடான இஸ்ரேலுடன் இணைந்து புதிய நடுத்தர கப்பலில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணை அமைப்பை மேம்படுத்தியது.இஸ்ரேல் மற்றும் இந்திய கடற்படைகளில் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த பாரக் 1 ஏவுகணை அமைப்பின் திறனை மேம்படுத்தி அதன் தாக்கும் தூரத்தை நீட்டிக் செய்து அதை சக்திவாய்ந்த அமைப்பாக மாற்ற இரு நாடுகளும் முனைந்தன.

Barak 1

முன்னதாக கடற்படைக்கு மட்டுமாக  shipborne air defense missile system ஆக மேம்படுத்தப்பட்ட பாரக் 8 பின்னாளில் தரைப்படைக்கும் ஏற்ற வகையிலும் மேம்பாடு செய்யப்பட்டது.

 Barak-8 எனப்படும் தற்போதைய அமைப்பு  Israel Aerospace Industries (IAI)மறறும் India’s Defence Research and Development Organisation (DRDO), Israel’s Administration for the Development of Weapons and Technological Infrastructure, Rafael, Elta Systems மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து மேம்படுத்தியது ஆகும்.

பாரக்-8 ஏவுகணையை ஏவும் கொல்கத்தா

Barak-8 Surface-to-Air Missile Defence system அல்லது LRSAM எதிரியின் வான் இலக்குகளை 360 டிகிரியும் கண்காணித்து அழிக்க வல்லது.

multi-mission radar, flexible control மற்றும் command system, மற்றும் two-way data link ஆகியவற்றுடன் Barak-8 வானில் வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை ஒரே நேரத்தில் கண்டறிந்து இரவு பகல் எதுவாயினும் அழிக்க வல்லது.

பாரக்-8 ஏவுகணையை ஏவும்  கொச்சி

எதிரியின் Unmanned Aerial Vehicles (UAVs), helicopters, and aircraft, anti-ship missiles, ballistic missiles, cruise missiles மற்றும்  fighter jets என எதுவாயினும் தாக்கி அழிக்க வல்லது.

தற்போது  Barak-8 system மூன்று வகைகளில் உள்ளது.

முதல் ஒன்று Barak 8 AMD/LRSAM எனப்படுகிறது.இது கப்பல்களில் பொருத்தப்பட்டு எதிரி விமானங்களில் இருந்து கப்பல்களை பாதுகாக்கும்.இது இஸ்ரேல் கடற்படைக்காக தயாரிக்கப்பட்டு இந்திய கடற்படையும் உபயோகிக்கிறது.

இரண்டாவது வகை MRSAM எனப்படும்.இடைத்தூரம் வரை வரும் இலக்குகளை அழிக்க வல்ல இந்த அமைப்பு தரைசார் அமைப்பு. tracking radar, a command and control system மற்றும்  mobile launcher systems களுடன் இந்த அமைப்பு வரும்.

தரைசார் அமைப்பு

மூன்றாவது வகை  Barak MX ஆகும்.இதை தரைப்படை மற்றும் கப்பல்படை என இரண்டும் பயன்படுத்த முடியும் என்ற அளவில் வருகிறது.

Barak-8 அமைப்பு 100 km தூரத்தில் வரும் இலக்குகளை தாக்க வல்லது. இதிலேயே அதிநவீன அல்லது  Barak-8ER 150கிமீ வரை சென்று தாக்கும் என கூறப்படுகிறது.

பல இலக்குகளை ஒரே நேரத்தில் துல்லியத்தன்மையுடன் தாக்குவதில் சிறப்பு பெற்றது பாரக்.

Leave a Reply

Your email address will not be published.