பாக் உளவு கட்டமைப்பு தகர்ப்பு:7 இந்திய கடற்படை வீரர்கள் கைது

பாக் உளவு கட்டமைப்பு தகர்ப்பு:7 இந்திய கடற்படை வீரர்கள் கைது

கார்வார் மற்றும் விசாகப்பட்டிணத்தில் கடந்த வெள்ளி அன்று முக்கிய அதிரகசிய தகவல்களை பாக்கிற்கு வழங்கியதாக ஏழு இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளன.

போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளின் நடமாட்டம் குறித்து பாக் ஏஜென்டுகளுக்கு கைது செய்யப்பட்டவர்கள் மயங்கியுள்ளனர்.முக்கிய பாதுகாப்பு தளவாடங்கள் சுற்றி பின்னப்பட்ட பாதுகாப்பு வளையத்தில் ஏற்பட்ட இந்த ஓட்டை காரணமாக பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

நமது உளவு அமைப்புகள் இந்த எதிரி உளவு அமைப்பு நொறுக்கி விசாக்கில் இருந்து மூன்று மாலுமிகளும் , கார்வாரில் இருவரும் , மும்பையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவுடைய கடற்கார் எல்லைகளை பாதுகாப்பது மேற்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையகங்களின் பொறுப்பு ஆகும்.இதில் கடற்படை மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து பாக் ஏஜென்டுகளுக்கு தகவல் அளித்தது குறித்து கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்சியாகவே உள்ளது.

இவர்கள் ஏழு பேர் தவிர மேலும் சிலரை கேள்விக்குள்ளாக்கி வருகிறது நமது ஏஜென்சிகள்.இந்தியாவின் அதிரகசிய நீர்மூழ்கியான அரிகந்தின் தலையை தளம் விசாகப்பட்டிணம் தான்.கிழக்கு கடற்படை பிரிவின் தலைமையகமும் அங்கு தான் உள்ளது.இவைகள் குறித்த தகவலும் பாக் ஏஜென்டுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல தான் இந்தியாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான விக்ரமாதித்யாவின் தலைமை தளமும் மேற்கு கட்டளையகத்தின் தலைமையகமும் ஆன மும்பை உள்ளது.அதோடு சேர்ந்து கார்வார் தளத்தின் தகவலும் பாக்கிற்கு கடத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் பாதுகாப்பில் எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என கடற்படை கூறியுள்ளது.

 மத்திய உளவு மற்றும் கடற்படை உளவு அமைப்புகள் இணைந்து தான் இந்த ஆபரேசன் நடத்தியுள்ளன.இதில் சில ஜீனியர் கடற்படை வீரர்களை ஆந்திர காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.

 ஆந்திர காவல் துறையின் உளவு பிரிவு ஆபரேசன் டால்பின் நோஸ் நடத்தி இந்த பாக் உளவு அமைப்பை உடைத்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மூன்று நாள் காவலில் உள்ளன.இவர்கள் அனைவரும் பாக்கில் உள்ள ஒரு பெண்ணுக்கு முகப்புத்தகத்தில் நண்பர்களாக உள்ளனர்.ஹாவாலா வழியாக கொடுக்கும் தகவல்களுக்கு இவர்களுக்கு பணம் வந்துள்ளது.

காமப் பேச்சுகளுக்கு வீரர்கள் மயங்கி அவளுடன் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  மேலும் சிலர் கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.