72 கம்பெனி மத்திய ஆயுதப் படைகள் காஷ்மீரில் இருந்து உடனே வெளியேற உத்தரவு
7000 துணை இராணுவப்படை வீரர்கள் காஷ்மீரில் இருந்து உடனே வெளியேற மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு 7000 வீரர்களும் உடனடியாக காஷ்மீரை விட்டு திரும்பிவர உத்தரவு பிறப்பித்துள்ளது.
72 கம்பெனி Central Armed Police Forces (CAPFs) படை வீரர்களும் தங்கள் இருப்பிடம் அல்லது முன் பணி செய்த இடங்களுக்கு திரும்புவர்.ஒரு கம்பெனி என்பது 100 வீரர்களை கொண்டது ஆகும்.
CRPF, BSF, ITBP, CISF மற்றும் SSB ஆகிய படைகள் 370 நீக்கத்துக்கு பிறகு காஷ்மீருக்கு அனுப்பப்பட்டது.
24 கம்பெனி சிஆர்பிஎப்,12 கம்பெனி எல்லைப் பாதுகாப்பு படை,12 கம்பெனி மத்திய தொழிலக பாதுகாப்பு படை,12 கம்பெனி இந்தோ திபத் எல்லைப் படை,12 கம்னெி சசாஸ்திர சீம பால் படைகள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.