ஆகாஷ் குறித்த தவறான தகவல்களை மறுத்து , மேலும் 7 ஸ்குவாட்ரான்கள் ஆர்டர் செய்த விமானப்படை

ஆகாஷ் குறித்த தவறான தகவல்களை மறுத்து , மேலும் 7 ஸ்குவாட்ரான்கள் ஆர்டர் செய்த விமானப்படை

ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை சரிவர செயல்படாது.சோதனைகளில் அதிகம் தோல்விகளை அடைகிறது மற்றும் அது  low serviceability கொண்டுள்ளது என இணையத்தில் the first post என்ற இணையத்தில் செய்தி வெளியானது.

 இரு நாட்களில் பெரும்பாலானோர் இது பற்றி பேசி வந்தனர்.தற்போது இந்த தவறான தகவல்களை நிராகரித்து விமானப்படை தற்போது 7 ஸ்குவாட்ரான் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஆர்டர் செய்துள்ளது.

 consistent மற்றும்  reliable performance காரணமாக  உள்நாட்டு தயாரிப்பான Akash Missile System, Surface to Air Missile (SAM) மேலதிகமாக ஆர்டர் செய்துள்ளது விமானப்படை.

இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO) தான் இந்த ஏவுகணை அமைப்பை மேம்படுத்தியது.  Bharat Dynamics Limited (BDL), Bharat Electronics Limited (BEL) தற்போது இந்த ஏவுகணைகளை தயாரிக்கிறது.ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு பயிற்சிகள் விமானப்படையால் ஒவ்வொரு முறையும் நடத்தப்படும் போது ஆகாஷ் ஏவுகணை சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றன.

 Ex- Vayu Shakti 2019 அல்லது Crossbow-18 ஆகிய விமானப்படை பயிற்சிகளின் போது Akash Missile System வெற்றிகரமாக இலக்கை தாக்கி வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

Crossbow-18 ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு பயிற்சியின் போது  Akash Missile System மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு உடன இணைந்து வான் பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபடுத்திய போது ஆகாஷ் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

ஆகாஷ் அமைப்பை விமானப்படை பலமுறை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

 ஆகாஷ் ஏவுகணை serviceability மற்றும் maintainability  பொருத்தவரை அதற்கு BDL/BEL தான் பொருப்பு.வடகிழக்கு மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சில ஸ்குவாட்ரான்களில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அவை பேசி தீர்க்கப்பட்டு பழுது நீக்கம் செய்யப்படும்.காலநிலை காரணமாக சில நேரங்களில் இதற்கு தாமதம் ஆகலாம் என முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.