தேசிய நீரோட்டத்தில் காஷ்மீர்..! 400 இளைஞர்கள் இராணுவத்தில் இணைப்பு….!!
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு தற்போது புதிதாக பயிற்சி பெற்ற 400 காஷ்மீர் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளன.இராணுவத்தில் இணைவதற்காக நடைபெற்ற கண்கவர் அணிவகுப்பு பொதுமக்கள் சூழ நடைபெற்றது.
ராங்கிரீத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரியில் நடைபெற் இந்த விழாவில் காஷ்மீரின் பல பகுதியில்இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்ற இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்தனர்.
இந்த அணிவகுப்பு General Officer Commanding (GoC) of Srinagar-based Chinar Corps, Lt Gen KJS Dhillon அவர்கள் முன்னிலையில் நடக்க இராணுவ வீரர்களின் பெற்றோர்கள் தனது மகன்கள் வீரநடை போடுவதை பெருமிதத்துடன் கண்டுகளித்தனர்.
அதன் பின் முன்னாள் ஹானரி கேப்டன் இலியாஸ் அகமது என்பவரை சந்தித்தார் கார்ப்ஸ் கமாண்டர்..தற்போது படையில் இருந்து ஓய்வு பெற்றாலும் இலியாஸ் அகமது பொது சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இரு சேனா விருதுகளை பெற்றுள்ள அகமது அவர்கள் பனிச்சரிவில் இருந்து மக்கள் அல்லது வீரர்களை மீட்பதில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.
இராணுவ தளபதியிடம் இருந்து ஐந்து முறை commendation card பெற்றவர்.குப்வாராவில் தங்தார் பகுதியை சேர்ந்தவர் அகமது அவர்கள்.