வரலாறாக மாறும் மிக்-27; விமானப்படையின் பலம் மேலும் சரிகிறது
மிக்-27ன் கடைசி ஸ்குவாட்ரானும் வரும் வெள்ளியன்று படையில் இருந்து விலக்கப்பட உள்ளது.
1999 கார்கில் போரின் போது மிக்-27 விமானம் ஆகச்சிறப்பாக செயல்பட்டது.”பகதூர்”என சிறப்பு பெயர் பெற்ற மிக்-27 வரும் வெள்ளியன்று கடைசியாக தனது பறப்பை மேற்கொள்ளும்.ஏழு விமானங்களை கொண்ட கடைசி ஸ்குவாட்ரான் வெள்ளியன்று முழுமையாக படையில் இருந்து விடுவிக்கப்படும்.
தென்மேற்கு வான் பிரிவின் கீழ் செயல்பட்டு வந்த மிக்-27 வரும் டிசம்பர் 27 அன்று படையில் இருந்து ஓய்வு பெறும்.அதன் பிறகு அவை நாட்டில் எங்கும் பறக்காது என பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கலோ கோஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஜோத்பூரில் உள்ள மிக்-27 ஸ்குவாட்ரான் தான் உலகில் இயங்கி வரும் ஒரே மிக்-27 ஸ்குவாட்ரான்.இந்தியாவும் படையில் இருந்து விடுவிக்கும் பட்சத்தில் மொத்தமாக மிக்-27 வரலாறாக மாறிவிடும்.
விடுவிக்கப்பட்ட பிறகு விமானப்படை மிக்-27 விமானங்களை என்ன செய்ய உள்ளது என்ற தகவல் சரியாக தெரியவில்லை.
ஸ்கார்பியன் 29 எனப்படும் இந்த மிக்-27 விமானத்தின் கடைசி ஸ்குவாட்ரான் ஜோத்பூரில் இருந்து தற்போது இயக்கப்பட்டுவருகிறது.