இந்தியாவின் ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகள் 2024ல் தான் AIP அமைப்பு பெறும்
முதலில் ஏஐபி என்றால் என்ன?
முதலில் AIP என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம்.AIP என்றால் Air-independent propulsion என்பது விளக்கம்.அதாவது டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள் நீருக்குள்ளேயே இருந்துவிட முடியாது.திறந்த வெளி வந்து தங்களது பேட்டரிகளை சார்ஜ் செய்தாக வேண்டும்.சாதாரண நாட்களில் பரவாயில்லை போர்க்காலங்களில் அடிக்கடி நீரை விட்டு வெளியே வந்தால் எதிரியின் நீர்மூழ்கி எதிர்பு ஆயுதங்களால் தாக்கப்படலாம்.இப்படி சார்ஜ் செய்தாலும் ஒரு சில நாட்களே நீருக்கடியில் தாக்குபிடிக்கலாம்.இப்போது ஏஐபி பொருத்திவிட்டால் நீண்ட நாட்கள் நீருக்குள் இருக்கலாம்.
இப்போது நமது புதிய ஸ்கார்பின் நீர்மூழ்கிகளில் ஏஐபி இல்லை.டிஆர்டிஓ சொந்தமாக பியுவல் செல் ஏஐபி தயாரித்து வருவதால் பிரெஞ்சு ஏஐபி வாங்கவில்லை.தற்போது கட்டப்பட்டு வரும் ஆறு ஸ்கார்பின் நீர்மூழ்களும் முதல் பராமரிப்பு பணியின் போது ஏஐபி பெற உள்ளது.
DRDO அதற்குள் ஏஐபி மேம்பாடு முடிந்தவுடன் முதல் பராமரிப்பு பணியின் போது இவை பொருத்தப்படும் .இதன் மூலம் நமது ஸ்கார்பின் நீர்மூழ்கிகள் நீண்ட நாட்கள் நீரடியில் இருந்து செயல்பட முடியும்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்படி 2024ல் தான் இந்தியாவின் ஸ்கார்பின் நீர்மூழ்கிகள் ஏஐபி அமைப்பை பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.