2014 முதல் உள்ளூர் நிறுவனங்களுடன் 1,96,000 கோடிகள் செலவில் தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம்

2014 முதல் உள்ளூர் நிறுவனங்களுடன் 1,96,000 கோடிகள் செலவில் தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம்

180க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களை உள்ளூர் நிறுவனங்களுடன் கடந்த 2014 முதல் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.1,96,000 கோடிகள் அளவிலான இந்த ஒப்பந்தங்களை தவிர்த்து மேலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Project P 17A திட்டத்தின் கீழ் பிரிகேட் ரக போர்க்கப்பல்கள் தயாரிக்க கடந்த  பிப்ரவரி 2015ல்   Mazagon Dockyards Limited (MDL) நிறுவனத்துடன் Rs 45,000 கோடிகள் அளவிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரு பிரிகேட் கப்பல்கள் கட்ட  Project P11356 திட்டத்தின் கீழ் Goa Shipyard Limited (GSL) உடன் கடந்த அக்டோபர் 2018ல் 14,000 கோடிகள் அளவிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தவிர விமானப்படைக்கு 41 Advanced Light Helicopters வாங்கவும் மற்றும் கடற்படைக்கு 32 ALH வானூர்திகள் வாங்கவும் இந்தியாவின்  Hindustan Aeronautics Limited (HAL) உடன் கடந்த மார்ச் 2017 மற்றும் டிசம்பர் 2017 ஆகிய தேதிகளில் Rs 14,100 crore அளவிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தவிர 1100 கோடிகள் செலவில் ஹால் நிறுவனத்திடம் இருந்து 14 Dornier 228 விமானங்கள் வாங்க கடந்த பிப்ரவரி 2015ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெல் நிறுவனத்திடம் இருந்து ஏழு ஸ்குவாட்ரான் Akash Missile System வாங்க அக்டோபர் 2019ல் Rs 6,300 crore செலவில் வாங்க முடிவு எடுக்கப்பட்டது.

அதே போல   Integrated Advanced Command மற்றும் Control System (IACCS) Nodes பெற Rs 7,900 crore செலவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவின்  Ordnance Factory Board  464 T-90S/SK டேங்குகள் வழங்க  Rs 19,100 crore செலவில் வாங்க போன மாதம் தான் முடிவு செய்யப்பட்டது.

மேலும் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்திடம் இருந்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்  100 155x52mm caliber self-propelled guns வாங்க  Rs 4,300 crore கோடிகள் அளவிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் airfield infrastructure (MAFI) ஐ நவீனமயமாக்க இந்திய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் விடப்பட உள்ளது.அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் தவிர்த்து தனியார் நிறுவனங்களுக்கும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 Titagarh Wagons Ltd, Force Motors Pvt Ltd, Tata Power SED, Tech Mahindra Ltd, Tata Motor Ltd, Ashok Leyland Ltd, Bharat Forge Ltd, MKU Ltd, SMPP Delhi, Alpha Design ஆகிய தனியார் நிறுவனங்களிடம் இருந்து 1000 Tons Fuel Barges, இலகுரக தாக்கும் வாகனம், Portable Diver Detection Sonar (PDDS), RFID based SMART Card, 6×6 மற்றும் 8×8 High Mobility Vehicle with Material Handling Crane, Dual Technology Mine Detector,  Ballistic Helmet, Bullet Proof Jacket (BPJ) and Integrated Gunnery ஆகிய சிறு தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

P-75(I) Submarines, Naval Utility Helicopters (NUH) மற்றும் விமானப்படைக்கு 114 Fighter Jets வாங்கும் ஒப்பந்தங்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.

தவிர 40க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

#TamilDefencenews
#Tamil
#Tamildefence

இந்திய இராணுவச்செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.