அதிகாரப்பூர் தகவல்: இந்திய இராணுவம் திருப்பி தாக்கியதில் குறைந்தது 2 பாக் வீரர்கள் மரணம்
அக்னூர் மற்றும் சுந்தர்பனி செக்டாரில் பாக் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.இதற்கு பதிலடி அளித்த இந்திய இராணுவம் குறைந்தது இரு பாக் வீரர்களை வீழ்த்தியுள்ளது.
அக்னூர் செக்டாரில் உள்ள கோர் மற்றும் பல்லன்வல்லா முன்னனி செக்டார்களில் பாக் தாக்கியதை அடுத்து இந்திய இராணுவம் கடும் பதிலடி கொடுத்துள்ளது.
எல்லைக்கோடு அருகிலேயே இரு பாக் வீரர்களின் உடலும் கிடப்பதை இராணுவம் கண்டறிந்து உறுதிபடுத்தியுள்ளது.
எல்லையில் கடும் சண்டை மற்றும் பதற்றம் நிலவுவதால் அந்த உடல்களை அடையாளம் காணாமல் உள்ளது இராணுவம்.
டிசம்பர் 20-21 இரவில் கடுமையான சண்டை நடைபெற்றதாக இந்திய இராணுவத்தின் லெப் கலோ தேவேந்தர் ஆனந்த் கூறியுள்ளார்.
சண்டை நிறுத்தப்பட்டதாக தகவல் இல்லாமலிருக்கும் கடைசியாக கிடைத்த தகவல் வரை தொடர் சண்டை நடைபெற்று வருகிறது.
நம் பக்கம் எந்த உயிரிழப்பும் இல்லை என்பது மகிழ்ச்சியான தகவல்.
நிலத்தடி பங்கர்களில் இந்திய மக்கள் தங்கும்படி இராணுவம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இராணுவ தளபதி எல்லைப் பதற்ற நிலை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கும் என கூறியதையும், உள்துறை அமைச்சர் அமித் சா அவர்கள் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இணைக்கப்படும் என்ற கூற்றையும் ,இந்தியா பிரம்மோஸ் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியா பாக் மீது செலுத்த தயாராக இருப்பதாக பாக் அமைச்சர் கூறியதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது.