Day: December 17, 2019

கராச்சி தாக்குதலும் ,பாக்கின் முடிவும்

December 17, 2019

திட்டமிட்டது போலவே, 4 டிசம்பர் அன்று தாக்கும் குழு கராச்சியிலிருந்து  290 மைல் தொலைவு பகுதியை  அடைந்திருந்தது.அது பாகிஸ்தான் விமானப் படையின் ரோந்து விமானங்கள் செல்லும் வான் பரப்பிலிருந்து பாதுகாப்பான தொலைவில் இருந்தது.1971  சமயங்களில் பாக் விமானப்படை விமானங்களில் இரவில் குண்டுவீச தேவையான தொழில்நுட்பங்கள் இல்லாதிருந்தது.எனவே இந்தியக் கடற்படை இரவில் கராச்சியை நெருங்கி தாக்க முடிவு செய்திருந்தது. பாகிஸ்தான் நேரப்படி இரவு 10.30, இந்தியத் தாக்கும் கப்பல் குழு காராச்சிக்கு 210 மைல் பகுதியை நெருங்கியது.கராச்சியை நெருங்கியதும் […]

Read More

ட்ரைடன்ட் முன்னேற்பாடும், கடற்படையின் அசாத்திய திட்டமும்

December 17, 2019

இந்தியா-பாக் கடற்படை போர் (1971) அட்மிரல் S.M. நந்தா அவர்கள் அக்டோபர் 10, 1915ல் பஞ்சாபில் பிறந்தவர்.கடற்படையில் இணைவதற்கு முன் கராச்சி  துறைமுகத்தில் வேலைபார்த்தார். Admiral SM Nanda Admiral நந்தா அவர்கள் ராயல் இந்திய கடற்படையில் இணைந்து,இரண்டாம் உலகப்போரின் போது தன்னார்வமாக பணியாற்றினார். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியக் கடற்படையில் இணைந்தார். 1948ல், INS டெல்லி போர்க்கப்பலில் முதல் லெப்டினன்டாக தனது பணியை தொடங்கினார். அதன் பிறகு 1951ல் INS ரஞ்சித்தின் தலைமைப் பணியை […]

Read More

கடற்படையின் ஆபரேசன் ட்ரைடன்ட் தயார் நிலையும், குக்ரி போர்க்கப்பல் நிலையும்

December 17, 2019

PNS ஹேங்கொர் ஒரு டாப்பின் வகை டீசல்-மின்சார நீர்மூழ்கி ஆகும்.இந்த நீர்மூழ்கி பிரான்சிடம் இருந்து 1969ல் பாகிஸ்தான் வாங்கி தனது கடற்படையில் இணைத்திருந்தது. PNS ஹேங்கொர்  15-22கிமீ வேகத்தில் பயணிக்க கூடியது.13 கிமீ/மணி வேகத்தில் 20,000கிமீ வரை கூட செல்லும் ஆற்றல் கொண்டது.30 நாட்கள் வரை கடலிலேயே இருக்க வல்லது.300மீ ஆழம் வரை நீருக்கடியில் செல்ல வல்லது.இதில் 12 டர்பிடோக்கள் (நீருக்கடியில் ஏவப்படும் ஏவுகணை போன்ற அமைப்பு)வைக்க முடியும். 1971 நவம்பர் 25/26 நடு இரவில் ஹேங்கொர் தனது தளத்தில் […]

Read More

இந்திய கடற்படையின் மிரட்டலான அதிரடிகளும், பாக்கின் அழிவும்

December 17, 2019

இந்தச் சமயத்தில் இந்தியக் கடற்படை இரகசிய கடற்படை நடவடிக்கைகளை தொடங்கியது.அவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டன.1971 வருடத்தின் டிசம்பர் மாதம்   மேற்கு பாகிஸ்தானிடம் இருந்து ,கிழக்கு பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியக் கடற்படை கிழக்கு பாகிஸ்தான் துறைமுகங்களை சுற்றி தனது போர்க்கப்பல்கள் கொண்டு தடையை ஏற்படுத்தியது.இதனால் கிழக்கு பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பல்கள் தங்கள் துறைமுகங்களிலேயே முடங்கிப் போயின.அது மட்டுமல்லாமல் எட்டு வெளிநாட்டு வணிக  கப்பல்களும் மாட்டிக் கொண்டன. Vikrant AC இதனால் பாகிஸ்தான் இராணுவ தலைமையகம் ,காஸி நீர்மூழ்கியை களமிறக்க சொல்லி […]

Read More

மூன்று மில்லியன் மக்களை கொன்ற பாக்கின் ஆபரேசன் சர்ச்லைட் மற்றும் இந்தியாவின் போர் தயார் நிலையும்

December 17, 2019

இந்தியா-பாக் கடற்படை போர் -1971 பாகிஸ்தானின் கிழக்கு கடற்படை (இன்றைய வங்கம்) தலைமையகம் 1969ல் உருவாக்கப்பட்டது.அதன் முதல் தலைமை அதிகாரியாக ( Flag officer ) ரியர் அட்மிரல் முகம்மது ஷாரிப் நியமிக்கப்பட்டார்.கிழக்கு கடற்படையால் நடத்தப்படும் அனைத்து ஆபரேசன்களுக்கும் நிர்வாகி அவரே.அவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் மரைன் படை,எஸ்எஸ்ஜியின் கடற் பிரிவு, சீல் படை ஆகியவை உருவாக்கப்பட்டன.இந்த படைகள் கிழக்கு கடற்படையின் கீழ் பல்வேறு ஆபரேசன்களில் இரகசியமாக ஈடுபட்டன. பாக் ரியர் அட்மிரல் முகம்மது ஷாரிப்  ஆனால் […]

Read More

பாக் கடற்படையின் ஆபரேசன் த்வார்க்காவும் இந்திய கடற்படையின் விழிப்புணர்வும்

December 17, 2019

இந்தியா-பாக் கடற்படை போர் -1971 1971 வங்கதேச விடுதலைப் போரில் பாக் மற்றும் இந்தியக் கடற்படைகள் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் தொடர்ச்சியாக  கடல் யுத்தம் நடத்தின. போரின் நடுப்பகுதியில் இந்தியக் கடற்படை பாகிஸ்தானுக்கு அழுத்தம் தரும் வகையில் அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் பாக்கிஸ்தான் கடற்படை கப்பல்கள் கிழக்கு பாகிஸ்தான் ( தற்போது வங்கதேசம்) செல்லாதவாறு தன் கப்பல்களைை கொண்டு கடற்பகுதியில்  தடைகளை ஏற்படுத்தியது.இது தரையில் போரிட்டுக் கொண்டிருந்த தரை மற்றும் […]

Read More

பிஎன்எஸ் காஸி பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் அழிந்த மர்மம்

December 17, 2019

பிஎன்எஸ் காஸி பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் அழிந்த மர்மம் PNS Ghazi நீர்மூழ்கி பற்றி இங்கு அனேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று அந்த நீர்முழ்கி வீழ்ந்த கதையை பாரக்கலாம். பிஎன்எஸ் காஸி பாகிஸ்தானின் நீர்மூழ்கி ஆகும்.1971 போரில் இந்த நீர்மூழ்கி 90 பேருடன் நீரில் மூழ்கியது. மூழ்கிய மர்மம்: இந்த நீர்மூழ்கியை இராஜ்புத் போர்கப்பல்தான் மூழ்கடித்தது என இந்திய கடற்படை கூறிவருகிறது.ஆனால் பாகிஸ்தானோ “இல்லை இது நீர்மூழ்கியினுள் ஏற்பட்ட வெடிவிபத்தினாலோ அல்லது விசாகப்பட்டிணம் கடற்பகுதியில் கண்ணிவெடிகள் வைக்கும் […]

Read More

கலோனல் ஹொஷியர் சிங் தாகியா

December 17, 2019

கலோனல் ஹொஷியர் சிங் தாகியா ரேக்டாட்-சோனிபட் ரோட்டில் அமைந்துள்ள சிசானா என்னும் கிராமத்தில் மே5, 1937ல் பிறந்தார்.அவருடைய தந்தை ஹிரா சிங் மதப்புமிக்க விவசாயி யாகவும் தாய் கனிவான மனங்கொண்டவராகவும் இருந்தார். அவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போது தன்னோ தேவி என்பவரை மணமுடித்தார் அவர்களுக்கு மூன்று மகன்கள்.  அவரது பள்ளி கல்வியை தன் சொந்த ஊரிலேயே முடித்தார். ஜாட் கல்லூரியில் ஒரு வருட படிப்பிற்க்கு பிறகு இந்திய இராணுவத்தில் சேர்ந்தார்.ஜீன் 30, 1963ல் அவர்  3வது கிரனேடியர்ஸ்  […]

Read More

1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால், பரம் வீர் சக்ரா

December 17, 2019

1971 போர் ஹீரோ : 2nd Lt அருண் கேட்டர்பால், பரம் வீர் சக்ரா 1950 அக்டோபர் 14ல் மகாராஸ்டீராவின் புனேயில் பிறந்தது அந்த வீரம். இந்த குழந்தை இந்தியாவின் நிகரற்ற வீரமாக மலரும் என அவர் தந்தை நினைத்ததில் வியப்பில்லை.ஏனெனில் அவரது குடும்பம் தங்களை இராணுவ சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தயங்கியதில்லை. அவரது பெரும் தாத்தா 1848ல் பிரிட்டாஷருக்கு எதிராக சீக் இராணுவத்தில் இணைந்து போரிட்டவர்.அவரது தாத்தா முதலாம் உலகப்போரில் வீரராக பணியாற்றியவர் மற்றும் அவரது அப்பா […]

Read More

உயிர்நீத்த தமிழக ராணுவ வீரர் – கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்

December 17, 2019

உயிர்நீத்த தமிழக ராணுவ வீரர் – கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய   கிராம மக்கள்                    மதுரை மாவட்டம் சோளம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பாலமுருகன் என்பவர் அருணாச்சலப்பிரதேசம் கிட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மழையின் காரணமாக வாகனம் கவிழ்ந்து உயிர்நீத்தார்.  அவரது உடல் 12.12.2019-ம் தேதியன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப  அவர்கள், […]

Read More