திருமணமான 16வது நாளில் வீரமரணம்; இராணுவ வீரரின் கண்ணீர் கதை

திருமணமான 16வது நாளில் வீரமரணம்; இராணுவ வீரரின் கண்ணீர் கதை

திருமணமான 16வது நாளில் இராணுவ வீரர் சௌரப் கட்டாரா வீரமரணம் அடைந்துள்ளார்.மனதுக்கு மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது இந்தச் சம்பவம்

ராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தின் பரௌலி கிராமத்தை சேர்ந்தவர் இராணுவவீரரான சௌரப் கட்டாரா.கடந்த வியாழன் அன்று காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் அவர்வீீரமரணம் அடைந்தார்.

கடந்த 16 அன்று தனது சொந்த ஊர் வந்திருந்த சௌரப் அவர்கள் நவம்பர் 23 அன்று தனது சகோதரியின் திருமணத்தை நடத்திவைத்துள்ளார்.அதன் பிறகு அடுத்த மாதமே டிசம்பர் 8 அன்று அவருக்கும் திருமணம் நடந்துள்ளது.அடுக்கடுக்கான மகிழ்சிகளுக்கு பிறகு தான் இந்த துக்க சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வாரம் தனது பணியை மீண்டும் தொடங்கி இராணுவ வீரர் சௌரப் குப்வாராவில் நடந்த குண்டுவெடிப்பில் வீரமரணம் அடைந்துள்ளார்.

டிசம்பர் 25 தான் சௌரப் அவர்களின் பிறந்த நாளும் கூட…அவரது மனைவியும் சகோதரியும் அவரதுபிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தயாராக இருந்த போது தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மூன்று வருடத்திற்கு முன்பு தான் இராணுவத்தில் இணைந்துள்ளார் சௌரப் அவர்கள்.அவரது அப்பா நரேஷ் கட்டாரா அவர்கள் 1999 கார்கில் போரில் பங்கேற்றவர்.2002ல் படையில் இருந்து ஓய்வு பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published.