மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் C-295 விமானங்கள் வாங்க திட்டம்- டாடா நிறுவனம் தயாரிக்கிறது

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் C-295 விமானங்கள் வாங்க திட்டம்- டாடா நிறுவனம் தயாரிக்கிறது

தொழில்நுட்ப பரிமாற்றம் சார்ந்த பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்பட்டு தற்போது Airbus C-295 transport வாங்க Cabinet Committee on Security (CCS) அனுமதி வழங்கியுள்ளது.

ஏர்பஸ் மற்றும் இந்தியாவின் டாடா நிறுவனம் இணைந்து இந்தியாவில் தயாரிக்க உள்ள இந்த விமானத்திற்காக விலை நிர்ணயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன.தற்போது செயல்பாட்டில் உள்ள பழைய  Avros transport aircraft-க்கு மாற்றாக இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

செயல்பாட்டில் உள்ள பழைய 56 அவ்ரோ போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.தவிர இந்திய கடலோர காவல் படைக்காக மேலேதிக ஆறு விமானங்கள் வாங்கப்படும்.

முதல் 16 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தால் நேரடியாக கட்டப்படும்.மற்றவை டாடா-ஏர்பஸ் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று இந்தியாவில் தயாரிக்கும்.

ஏர்பஸ் நிறுவனத்திற்கு தற்போது 50க்கும் மேற்பட்ட இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏவியேசன் பாகங்களை தயாரித்து வழங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published.