நாக் ஏவுகணை குறித்து இணையத்தில் பரவிய தவறான தகவலுக்கு டிஆர்டிஓ பதில்

நாக் ஏவுகணை குறித்து இணையத்தில் பரவிய தவறான தகவலுக்கு டிஆர்டிஓ பதில்

நாக் ஏவுகணை மேம்பாடு குறித்து இணையத்தில் பரவிய தவறான தகவல்களுக்கு டிஆர்டிஓ விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவின் Defence Research and Development Organisation (DRDO) சொந்தமாக Anti-Tank Guided Missile (ATGM) Nag ஏவுகணை மேம்படுத்தி வருகிறது.
மனிதர்கள் ஏந்தி ஏவுகிற ஒரு வகையான  Man Portable ATGM (MPATGM) வகையும் தற்போது மேம்பாட்டில் உள்ளது.

இந்த வாரம் இந்திய இராணுவம் புதிதாக இஸ்ரேலிடம் இருந்து  Spike-LR (Long Range) ATGM வாங்கி அதை படையில் இணைத்து பின் மத்திய பிரதேசத்தின் இன்பான்ட்ரி பள்ளியில் அதை சோதனையும் செய்தது.கிட்டத்தட்ட  12 launchers மற்றும் 250 ஸ்பைக் ஏவுகணைகளை அவசர கால தேவையாக வாங்கி படையில் இணைத்தது இராணுவம்.அதாவது அவசர கால வேளையில் இராணுவம் தன்னிலையாக தளவாடம் வாங்கும் புதிய சக்தியை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இராணுவத்திற்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்பைக் ஏவுகணை சோதனை குறித்து அதன் தயாரிப்பாளரான  Rafael Advanced Defense Systems வெளியிட்ட தகவல்படி , இந்திய இராணுவம் மூன்றாம் தலைமுறை டாங்க் எதிர்ப்பு வாங்கும் தங்களது நிலைப்பை மறுபடியும் பரிசீலிக்க வேண்டும் என கூறியிருந்தது.

“ DRDO ATGM தயாரிக்கும் திட்டம் மற்றும் இந்திய நிறுவனங்கள் ஏதேனும் ஒன்று மூன்றாம் தலைமுறை டேங்க் எதிர்ப்பு ஏவுகணை தயாரிக்கும் திட்டம் இவ்விரண்டும் குறித்து மறுசிந்திப்பு வேண்டும், ஏற்கனவே கையில் நான்காம் தலைமுறை ஏவுகணை ( ஸ்பைக்) இருக்கும் போது மூன்றாம் தலைமுறை ஏவுகணை தயாரிக்க அழைப்பது கேள்விக்குட்பட்டது” என இஸ்ரேலின் ரபேல் நிறுவனம்
கூறியிருந்தது.

(குறிப்பு: ரபேல் விமானம் வேறு, ரபேல் நிறுவனம் வேறு.ரபேல் நிறுவனம் இஸ்ரேலுடையது.ரபேல் விமானம் பிரான்சின் டஸ்ஸால்ட் ஏவியேசன் நிறுவனத் தயாரிப்பு)

மேலும் கூறுகையில் “ரபேல் நிறுவனம் இந்தியாவின் கல்யானி க்ரூப் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.இதன் மூலம் ஸ்பைக் ஏவுகணைகளை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்” என்றும் கூறியிருந்தது.

இதற்கு பதிலளித்திருந்த
DRDO அதற்காக ஒரு ஸ்டேட்மென்டை வெளியிட்டிருந்தது.

நாக் ஒரு மூன்றாம் தலைமுறை  ATGM ,பல கட்ட சோதனைகளுக்கு பிறகு படையில் இணையும் தருவாயில் உள்ளது.அதே போல வீரர்கள் நேரடியாக ஏவக்கூடிய MPATGM மேம்பாட்டின் முடிவில் உள்ளது.இது ஒரு நான்காம் தலைமுறை ஏவுகணை ஆகும்.
இதுவரை ஆறு சோதனைகள் முடிந்து, மேம்பாடு தொடர்பான அனைத்து சோதனைகளும் முடிந்துள்ளது.

இன்னும் ஒரு வருட காலத்திற்குள் தொடர் தயாரிப்புக்கு இது தயாராகிவிடும்.நாக் ஏவுகணை இந்த வகை ஏவுகணைகளிலேயே சிறந்தது.அது இந்தியகால நிலைகளுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது என டிஆர்டிஓ கூறியுள்ளது.

கோடை காலங்களில் பாலைவன பகுதியில் ஒரு டேங்க் மற்றும் மணல் இரண்டுமே ஒரே வெப்பநிலையில் இருக்கும்.இதில் டேங்கை அடையாளம் கண்டு ஏவுகணை மூலம் அடிப்பது ஒரு சாவாலான பணி ஆகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தேவைக்கு ஏற்ப மிகச் சவாலான தளவாடங்களை தயாரிக்கும் திறனை நாம் இன்று பெற்றுள்ளோம்.அதே போல தான் இந்திய தனியார் நிறுவனங்களும் பல ஆண்டுகள் கடந்து இந்த நிலையை அடைந்துள்ளன.

முதலில் இந்திய இராணுவம் அளவில் டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் அதிக அளவில் வாங்க திட்டமிட்டிருந்தது.அதன் பிறகு சோதனைகள் நடத்தி ஸ்பைக் ஏவுகணை வாங்க முடிவு செய்திருந்தது.பின்பு இந்த திட்டம் விலை தொடர்பான பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது.அதன் பிறகு மீண்டும் அரசுகளுக்கு இடையான ஒப்பந்தம்மூலம் வாங்க முயன்று அதுவும் முடியாமல் போனது.அதன் பிறகு தான் உள்நாட்டு தயாரிப்பு MPATGM கொண்டு இந்த தேவைகளை பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டு மேம்பாடுகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வாங்கப்பட்டுள்ள Spike-LR ஏவுகணை இதற்கு முன் வாங்க நினைத்த ஸ்பைக் ஏவுகணை தவிர்த்த வேறு வகை.300 லாஞ்சர்கள் மற்றும் 8000 ஏவுகணைகள் வாங்க போட நினைத்த ஒப்பந்தத்தில் வாங்க நினைத்த ஸ்பைக் அல்ல இது என   கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.