இந்தியாவின் ஒருங்கிணைந்த சோதனை தளத்தை சிங்கப்பூர் உபயோகிக்க அனுமதி
முதன் முறையாக இந்தியா தனது ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தை இன்னொரு நாடு பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
ஒடிசா கடலோர பகுதியில் இருப்பது தான் சந்திபூர் ஒருங்கிணைந்த சோதனை தளம்.அதிரகசிய தளமான இங்கு தான் இந்தியா தனது அனைத்து ஆயுதச் சோதனைகளையும் செய்கிறது.
இந்த ஒருங்கிணைந்த தளத்தை சிங்கப்பூர் நாடு பயன்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளனர்.இந்தியா இதுபோல வெளிநாடு ஒன்றுக்கு அனுமதி அளிப்பது இதுவே முதல் முறை.