கனரக ஆர்டில்லரி மற்றும் சிறப்பு படை கமாண்டோக்களை எல்லைக்கு நகர்த்தும் பாகிஸ்தான்
ஆகஸ்டு 5க்கு பிறகு எல்லைக்கு படைகளை தற்போது தான் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
370 சரத்து நீக்கப்பட்ட பிறகு தற்போது பாக் தனது ரெஜிமென்டுகளை எல்லைக்கு நகர்த்தி வருகிறது.எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் பொருட்டு பாக் கனரக ஆர்டில்லரிகளை தற்போது எல்லைக்கு நகர்த்தி வருகிறது.
பாக்கிடம் மலையக மற்றும் நடுத்தர ரக என 16 ஆர்டில்லரி ரெஜிமென்டுகள் உள்ளன.சுமார் 6000 வீரர்கள் சகிதம் எல்லை முழுதும் பரவி உள்ளனர்.
தற்போது அத்துமீறி துப்பாக்கி சுடுதலில் அடிக்கடி ‘calibre escalation’ செய்து வருகிறது.அதாவது சிறிய ரக மோர்ட்டார்கள் மூலம் தாக்க ஆரம்பித்து பெரிய ரக ஷெல்களை வீசி தாக்குதல் நடத்துகிறது.இந்திய இராணுவ நிலைகள், மற்றும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் இடங்கள் தான் பாக்கின் இலக்காக இருக்கும்.இதன் மூலம் அதிக பொருட்சேதம் மற்றும் உயிர்சேதத்தை பாக் ஏற்படுத்தும்.
இதற்கு இந்திய இராணுவமும் அதே அளவிலான பதிலடியை கொடுக்கும்.இந்த வருடம் மட்டும்
2,472 அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான்.
மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவு பாக்கின் சிறப்பு படையான Special Service Group (SSG)-ன் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளது.700 கமாண்டோக்கள் வீதம் குறைந்தது இரு பட்டாலியன் சிறப்பு படை வீரர்களை எல்லையில் நிலைநிறுத்தியுள்ளது பாக்.
இந்திய ரோந்து குழு வீரர்கள் மீது தாக்குதல் நடத்த இந்த சிறப்பு படை வீரர்களுடன் Border Action Teams (BAT) பயங்கரவாதிகளும் இணைந்துள்ளனர்.சில நாட்களுக்கு முன் கூட இந்த வீரர்கள் எல்லை கடந்து கிருஷ்ணகாட்டி செக்டாரை தாக்கியதில் ஒரு இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.
கிட்டத்தட்ட 80,000 வீரர்களை பாக் தற்போது எல்லையில் நிறுத்தியுள்ளது.அதாவது 30,000 வீரர்கள் கொண்ட 30 infantry units, மற்றும் 17,000வீரர்களை கொண்ட 25 Mujahid battalions , armoured (tanks) battalion,1400 வீரர்கள் கொண்ட ஒரு air defence unit ஆகியவை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மறுபக்கம் இந்தியா 1 லட்சம் துருப்புகளை எல்லையில் குவித்துள்ளது.அதாவது ராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள் மற்றும் ஆர்டில்லரி ரெஜிமென்ட் என பாக்கை விட மும்மடங்கு படையை இந்தியா குவித்துள்ளது.இந்தியா எவ்வித சிறப்பு படையையும் எல்லைக்கு அருகே நிலைநிறுத்தவில்லை.