நான்கு அணுஆயுத ஏவுகணை சோதனைகள் -இம்மாதத்தில் திட்டம்

நான்கு அணுஆயுத ஏவுகணை சோதனைகள் -இம்மாதத்தில் திட்டம்

நான்கு அணு ஆயுத ஏவுகணைகளை இந்த மாதம் சோதனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

நீர்மூழ்கி ஏவு (submarine-launched long-range ballistic missile)  K-4, சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணயைான பிரம்மோஸ், நடுத்தூர ஏவுகணை அக்னி-2 மற்றும் குறைதூர பலிஸ்டிக் ஏவுகணை பிரித்வி ஆகியவை இந்த மாதம் சோதனை செய்யப்பட உள்ளது.

 K-4 நீர்மூழ்கி ஏவுகணை இந்த மாதம் November 8 சோதனை செய்யப்பட உள்ளது.அதை தொடர்ந்து இரு வகை பிரம்மோஸ் ஏவுகணை நவம்பர் 11 அன்றும், அக்னி-2 நவம்பர் 16 அன்றும் பிரித்வி ஏவுகணை நவம்பர் 20 அன்றும் சோதனை செய்யப்பட உள்ளது.

அதிநவீன வழிகாட்டு அமைப்பு கருவிகளுடன் கே-4 ஏவுகணை விசாகப்பட்டிணம் கடற்கரை பகுதியில் உள்ள கடலடி சோதனை தளத்தில்  நடைபெறும்.தவிர இந்தியாவின்
 Strategic Forces Command (SFC) அக்னி 2 சோதனையை மேற்கொள்ளும்.மேலும் பிரித்வி ஏவுகணை சோதனையும் மேற்கொள்ளும்.

BrahMos Aerospace நிறுவனம் இரு முறை பிரம்மோஸ் ஏவுகணை சோதனை மேற்கொள்ளும்.ஒன்றுதரையில் இருந்து ஏவப்படும் வகை மற்றும் மற்றொன்று விமானத்தில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் வகை என இரு வகைகளும் சோதனை செய்யப்பட உள்ளது.

கடல் சார் இலக்குக்கு எதிராக பிரம்மோஸ் வான் வகை சோதனை செய்யப்பட்ட பிறகு இந்த ரக பிரம்மோஸ் தொடர் தயாரிப்புக்கு உள்ளாக்கப்படும்.

எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவும் நேரத்தில் நான்கு அணு ஆயுத ஏவுகணைகள் ஏவப்பட உள்ளது.இந்தியா “முதலில் தாக்கமாட்டோம்” என்ற கொள்கையை கடை பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

காலநிலை சரியாக அமையும் பட்சத்தில் சோதனைகள் திட்டமிட்டபடி தடைபெறும்.கே-4 மற்றும் அக்னி-2 ல் புதிய  new advanced systems பொருத்தப்பட்டு சோதனை செய்யப்படுவதால் இந்த இரு சோதனைகளும் முக்கியத்துவம் பெறுகிறது.

நீருக்குள் இருந்து வானூக்கு பறந்து தரைப் பகுதி இலக்குகளை தாக்க வல்ல கே-4 ஏவுகணை  12 metre நீளம் மற்றும் 1.3 metre அகலம் கொண்டது.17 டன் எடையுடை இந்த கணை 2 டன் அளவுள்ள அணு வெடிபொருளை 3500கிமீக்கு அப்பால் கொண்டு சேர்க்க வல்லது.

அனைத்து சோதனைகளும் சாதனைகளாக மாற இந்திய இராணுவச் செய்திகள் சார்பாக வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published.