டாங்க் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு படையில் சேர்ப்பு: எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு

டாங்க் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு படையில் சேர்ப்பு: எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு

இஸ்ரேல் தயாரிப்பு டேங்க் எதிர்ப்பு ஏவுகணையான ( Israel-made anti-tank guided missiles (ATGMS))  Spike ஏவுகணையை படையில் இணைத்துள்ளது இந்திய இராணுவம்.வடக்கு கட்டளையக படைப் பிரிவின் கீழ் உள்ள எல்லைக் கோடு பகுதியில் பாதுகாப்பிற்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

  “fire and forget” ஏவுகணையான இந்த Spike ATGM வீரர்களால் ஏவப்படக்கூடியது.நான்கு கிமீ தொலைவில் உள்ள டேங்க் மற்றும் பங்கர் போன்ற கடின இலக்குகளை துல்லியமாக அழிக்க கூடியது.

மொத்தமாக 12 லாஞ்சர்களுடன் 210 ஏவுகணைகள் 280 கோடிகள் செலவில் வாங்கப்பட்டு படையில் இணைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது.

மலைப்பாங்கான பகுதிகளிலும் கூட இந்த அமைப்பை உபயோகிக்க முடியும்.

இஸ்ரேலின் Rafael Advanced Defence Systems நிறுவனம் தான் இந்த ஸ்பைக் ஏவுகணை அமைப்புகளை தயாரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.