“பாகிஸ்தானை நம்ப முடியாது”-சியாச்சினில் இந்திய இராணுவ இருப்பு தொடரும்

“பாகிஸ்தானை நம்ப முடியாது”-சியாச்சினில் இந்திய இராணுவ இருப்பு தொடரும்

பாகிஸ்தானை நம்ப முடியாது என இந்திய இராணுவம் கூறியுள்ளது.சியாச்சின் கிளாசியரில் இரு நாட்டு இராணுவங்களிலும் உயிரிழப்பு ஏற்படுகிறது.இதனால் இரு நாட்டு இராணுவங்களும் கிளாசியரில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக வைக்கப்படுகிறது.ஆனால் பாகிஸ்தானை நம்ப முடியாத காரணத்தால் கிளாசியரில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்ற முடியாது என இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கள் அன்று சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் நான்கு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.இரு இராணுவ போர்ட்டர்களும் உயிரிழந்தனர்.இரு வீரர்கள் மீட்கப்பட்டனர்.

சுமார் 18,000 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளாசியரில் குளிர் மைனஸ் 70 டிகிரிக்குள் கீழ் செல்லும்.

இரு நாட்டு இராணுவங்களும் கிளாசியரை விட்டு வெளியேற இதற்கு முன் பாகிஸ்தான் இந்தியாவை கேட்டது.ஆனால் பாகிஸ்தானை நம்ப முடியாத காரணத்தால் இந்தியஇராணுவம் மறுத்துவிட்டது.

அப்படி இரு நாடுகளும் வெளியேற நினைத்தால் அதற்கு பல புரோசிசர்கள் உள்ளன.கிளாசியரில் இரு நாடுகளும் கொண்டுள்ள நிலைகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.அதற்கு பாக் தயாராக இல்லை.

இன்னொரு கார்கிலுக்கு நாம் அனுமதிக்கவே கூடாது.அப்படி நாம் வெளியேறினால் அதை திரும்ப கைப்பற்றுவது மிக கடினம்.

மலை சார் போர்முறை என்று வரும் போது உயரமே முக்கிய பங்காற்றும்.சியாச்சினின் உயரம் இந்திய இராணுவ வசம் தான் தற்போது உள்ளது.

போர்வந்தாலும் அங்கு இந்திய இராணுவத்தின் கை ஓங்கியே இருக்கும் 

Leave a Reply

Your email address will not be published.