ஆறாவது டோர்னியர் ஸ்குவாட்ரானை படையில் இணைத்த இந்திய கடற்படை

ஆறாவது டோர்னியர் ஸ்குவாட்ரானை படையில் இணைத்த இந்திய கடற்படை

இந்தியா கடற்படை ஆறாவது டோர்னியர் விமான ஸ்குவாட்ரானை படையில் இணைத்துள்ளது.பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த குஜராத்தின் போர்பந்தர் பகுதியில் இந்த டோர்னியர் ஸ்குவாட்ரான் படையில் இணைக்கப்பட்டுள்ளது.இதன் உதவியுடன் இனி குஜராத் கடற்பகுதியில் பாக்-இந்திய எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்க முடியும்.

இந்திய கடற்படையின் ரேப்டார் ஸ்குவாட்ரான் என்று அழைக்கப்படும்  Indian Naval Air Squadron 314 ல் இந்த புதிய விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளன.இந்த நான்கு புதிய தலைமுறை டோர்னியர் விமானம் Deputy Chief of Naval Staff Vice-Admiral M S Pawar அவர்கள் முன்னிலையில் படையில் சேர்க்கப்பட்டது.

Indian Naval Air Squadron (INAS) 314-ல் புதிய விமானங்கள் இணைக்கப்பட்டதின் மூலம் அந்த பகுதியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு அராபியன் கடற்பகுதியில் கடற்சார் கண்காணிப்பை அதிகரிக்கவும்,பயங்கரவாத/எதிரிகள் ஊடுருவல் குறித்து அறியவும் இந்த டோர்னியர் விமானங்கள் உதவும் என வைஸ் அட்மிரல் பவார் கூறியுள்ளார்.

அங்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அங்கு செல்லும் முதல் பிரிவாக இந்த டோர்னியர் விமானங்கள் திகழும்.

இந்திய இராணுவச் செய்திகள்

Leave a Reply

Your email address will not be published.