புதிய இராணுவத் தளபதி தேர்வு, மூன்று தளபதிகள் பெயர் பிரதமருக்கு அனுப்பி வைப்பு

புதிய இராணுவத் தளபதி தேர்வு, மூன்று தளபதிகள் பெயர் பிரதமருக்கு அனுப்பி வைப்பு

இந்திய இராணுவத்திற்கான புதிய இராணுவ தளபதியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இத்துடன் இந்தியாவிற்காக முதல் நான்கு நட்சத்திர Chief of Defence Staff (CDS) என்ற புது பதவிக்கான முதல் தளபதியும் அறிவிக்கப்பட உள்ளது.

இறுதி முடிவிற்காக தற்போது பதவியில் உள்ள மூன்று தளபதிகளின் பெயர்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வெளிவரும் தகவல்படி இந்தியாவின் முதல் CDS ஆக தற்போது தளபதியாக உள்ள பிபின் ராவத் அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் இவரே முப்படைகளுக்கும் ஒரே ஆலோசகராக இருப்பார்.

தற்போது தளபதியாக உள்ள பிபன் ராவத் அவர்கள் வரும் டிசம்பர் 31 அன்று ஓய்வு பெறுகிறார்.ராவத் அவர்கள் ஓய்வு பெறுவதற்கு இரு வாரத்திற்கு முன்னரே புதிய தளபதிகள் பெயர் அறிவிக்கப்பட உள்ளது.

Vice-Chief Lt Gen Manoj Mukund Naravane, Northern Army Commander Lt Gen Ranbir Singh மற்றும் Southern Army Commander Lt Gen Satinder Kumar Saini ஆகிய தளபதிகள் தான் தற்போது அடுத்த தளபதிக்காக போட்டியில் உள்ளனர்.

Lt Gen Naravane அவர்கள் Eastern Army Commander மற்றும் Commander of the Army Training Command (ARTRAC) ஆகவும் இருந்துள்ளார்.அவர் தான் மூவரில் சீனியர் ஆவார்.

அதே போல புதிய CDS பதவிக்கான தலைவரும் அறிவிக்கப்படுவார்.

CDS பதவிக்காக தேர்ந்தெடுக்கப்படும் தளபதி மற்றவர்களை விட அதிக கடினமான பணிகளை செய்ய வேண்டியிருக்கும்.

அவரே இந்தியாவின் Strategic Forces Command (SFC), Andaman and Nicobar Command (ANC), Cyber Command, Space Command மற்றும் the Armed Forces Special Operations Command ஆகிய கட்டளையகங்களுக்கும் பொறுப்பு.

முப்படைகளின் செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு விரைவில் தியேட்டர் கமாண்ட்கள் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய பாதுகாப்பு துறையில் புது சகாப்தம்..

Leave a Reply

Your email address will not be published.