பாலக்கோட் பயங்கரவாத முகாம்களை பாக் திரும்ப திறக்க முயற்சி: இந்தியா

பாலக்கோட் பயங்கரவாத முகாம்களை பாக் திரும்ப திறக்க முயற்சி: இந்தியா

இந்திய விமானப்படை குண்டு போட்டு தாக்கிய பாலக்கோட் பயங்கரவாத முகாமை மறுபடியும் திறக்க பாக் முயற்சித்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

யூனியன் அமைச்சர் கிசான் ரெட்டி அவர்கள் இராஜ்ய சபாவில் பேசிய போது, நமது எல்லையை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்தியாவின் ஒருங்கிணைப்பு பாதுகாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 26ல் இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாலக்கோட் முகாமில் தாக்குதல் நடத்தின.இதன் பிறகு இந்த பயங்கரவாத முகாம் செயல்படாமல் நின்றுபோனது.

பயங்கரவாதத்திற்கு எதிராக நமது படைகள் சிறப்பாக செயல்படுவதாகவும் காஷ்மீரில் பயங்கரவாதம் பெருமளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.இந்த வருட நவம்பர் 17 வரை 549 பயங்கரவாத சம்பவங்களில் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார்.மேலும் 79 வீரர்களும் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இதே 2018ல்  614 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்று அதில் 39 பொதுமக்கள் உயிரிழக்க, 91 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.