சீக்கிரம் டெலிவரி செய்யுங்கள்; கப்பல் கட்டும் தளத்திற்கு கடற்படை கோரிக்கை

  • சீக்கிரம் டெலிவரி செய்யுங்கள்; கப்பல் கட்டும் தளத்திற்கு கடற்படை கோரிக்கை

இந்தியா சொந்தமாக கட்டிவரும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை விரைவில் டெலிவரி செய்யுமாறு கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.

சீனா தனது இரண்டாவது விமானம் தாங்கி கப்பலை படையில் இணைக்க தயாராக உள்ளது.ஆனால் கொச்சின் கப்பல் கட்டும் தளம் வெகுநாட்களாக விக்ராந்த் கப்பலை கட்டி வருகிறது.இந்நிலையில் கப்பலை விரைவில் தயாரித்து வழங்க கடற்படை கோரிக்கை வைத்துள்ளது.40,000 tons எடையுடைய கப்பலை கொச்சின் தளம் கட்டிவருகிறது.

கட்டுமான முடிவு நேரத்தை பல முறை கடந்துவிட்ட போதிலும் இன்னும் கட்டுமானம் முடிவடையாமல் உள்ளது.சீனா வேகமாக தனது படையை விரிவு படுத்தும் நேரத்தில் நாமும் வேகம் காட்டுதல் வேண்டும்.

விக்ராந்த் பிப்ரவரி 2021க்குள் டெலிவரி செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம் என கடற்படை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.அதன் பிறகு வான் பரப்பு சோதனைகள் மேற்கொள்ள ஒரு வருடம் ஆகும்.அதன் பின்னே தான் படையில் இணைத்தல் முடியும்.எனது கணிப்பு படி 2024-25 வாக்கில் தான் விக்ராந்த் படையில் இணையும்.

Leave a Reply

Your email address will not be published.