சிறப்பு படைகளின் பிணைப்பை அதிகரிக்க காஷ்மீரில் களமிறக்கம்

சிறப்பு படைகளின் பிணைப்பை அதிகரிக்க காஷ்மீரில் களமிறக்கம்

இராணுவம்,கடற்படை,விமானப்படை ஆகிய முப்படைகளின் சிறப்பு படைகளுக்கிடையேயான இணைந்து செயல்படும் திறனை அதிகரிக்கும் பொருட்டு அவை மூன்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக காஷ்மீரில் களமிறக்க பட்டுள்ளன.

மூன்று சிறப்பு படைகளாவன Army’s Para (Special Forces), Navy’s Marine Commandos (MARCOS) மற்றும் Indian Air Force’s Garud Special Force ஆகியவை பாதுகாப்பு அமைச்சகம் புதிதாக தொடங்கியுள்ள  Armed Forces Special Operations Division (AFSOD) படையின் கீழ் காஷ்மீரில் களமிறங்கியுள்ளனர்.

இராணுவத்தின் பாரா படை ஏற்கனவே காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

 MARCOS மற்றும் Garuds படைகளும் இது போல முழுதாக களமிறக்கப்பட உள்ளனர்.

இருந்தாலும் கடற்படையின் மார்க்கோஸ் வீரர்கள் ஏற்கனவே காஷ்மீரின் வூலார் மற்றும் அதை சுற்றியள்ள பிராந்தியங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே போல கருட் வீரர்களும் இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மூன்று சிறப்பு படைகளும் முழுதாக இணைந்து களமிறக்கப்படுவது இதுவே முதல் முறை.

இப்படி மூன்று சிறப்பு படைகளும் அங்கு களமிறக்கப்படுவதின் நோக்கம் உண்மையான சூழ்நிலையில் மூன்று படைகளும் இணைந்து செயல்பட்டு ஆபரேசன்களின் தெளிவு பெறுவது தான்.

பயிற்சிகள் ஏற்கனவே இணைந்து செய்திருந்தாலும் உண்மையான களத்தில் இணைந்த செயல்படுவது என்பது வேறு.

இந்த  புதிய படையான  Armed Forces Special Operations Division (AFSOD) முதல்தலைமை அதிகாரி Major General Ashok Dhingra ஆவார்.

Leave a Reply

Your email address will not be published.