பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு மேலதிக அவாக்ஸ் விமானங்கள் வாங்க உள்ள இந்தியா

பாலக்கோட் தாக்குதலுக்கு பிறகு மேலதிக அவாக்ஸ் விமானங்கள் வாங்க உள்ள இந்தியா

பாலக்கோட் தாக்குதலின் போது நம்முடைய நேத்ரா விமானம் மிகச் சிறப்பாக செயல்பட்டது.மேலும் நேத்ரா ரக விமானங்களின் தேவை விமானப்படைக்கு அதிக அளவு தேவையாக உள்ளது.எனவே அதை விட பெரிய ,அதிக தூரம் கண்காணிக்க வல்ல பெரிய விமானங்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ‘eye in the sky’ project எனப்படும் இந்த திட்டம் அவாக்ஸ் விமானங்கள் வாங்கும் திட்டம் ஆகும்.அதாவது தமிழில் பறக்கும் ரேடார் எனப்பொருள் கொள்ளலாம்.இவை நம் எல்லைக்குள் இருந்த வண்ணமே எதிரியின் வான் பரப்பை கண்காணிக்க கூடியது.எதிரியின் வான் பகுதிக்குள் ஊடுருவி தாக்க செல்லும் நமது தாக்கும் விமானங்களை எதிரிகளிடம் இருந்து வழிநடத்தக்கூடியது.இதற்காக இது எல்லை தாண்ட வேண்டியஅவசியம் இல்லை.

எதிரியின் வான் பரப்பில் ஆழ ஊடுருவி பார்க்க அதற்கு ஏற்ற பறக்கும் ரேடார்கள் தேவை.அவை 360 டிகிரி கோணமும் கண்காணிக்கும் திறன் பெற்றிருப்பதும் அவசியம்.இதற்காக Airbus நிறுவனத்திடம் இருந்து புதிய இரு  A330 விமானங்கள் வாங்கப்பட்டு அவற்றில் நமது  Defence Research and Development Organisation (DRDO) நிறுவனம் தனது ரேடாரை இணைத்து அவாக்ஸ் விமானமாக மாற்றும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது ‘Netra’ airborne early warning and control aircraft விமானங்கள் இரண்டு வைத்துள்ளது.பிரேசிலிடம் இருந்து விமானங்கள் பெற்று அதில் இந்தியா தனது ரேடாரை இணைத்துள்ளது.ஆகச் சிறந்த அமைப்பாக உள்ள இந்த விமானங்கள் பாலக்கோட் தாக்குதலில்உபயோகபடுத்தப்பட்டது.

Mirage 2000 விமானங்களை பாகிஸ்தானுக்குள் அனுப்பி குண்டு போட இந்த நேத்ரா விமானங்கள் உதவின.

இரு Netra aircraft மற்றும் மூன்று எ-50 ‘Phalcon’ systems மட்டுமே உள்ளது.ஆனால் பாக் நம்மை விட அதிக விமானங்கள் வைத்துள்ளது.

மேலும் பால்கன் அவாக்ஸ் விமானங்கள் விமானப்படையின் தேவையை சரிவர நிறைவேற்றாத காரணத்தால் அதிகாரிகள் அதிருப்தியில்தான் உள்ளனர்.

பாக் ஆறு Saab  2000 early warning aircraft வைத்துள்ளது.பிப் 27 வான் சண்டையில் இவற்றை பாக் ஆகச் சிறப்பாக பயன்படுத்தியது.

இவைகளின் உதவியுடன் இந்திய எல்லைக்குள் 25 போர்விமானங்கள் நுழைந்து தாக்கிவிட்டு திரும்பின.

 2015லேயே அவாக்ஸ் விமானங்கள் வாங்க அனுமதி அளித்தும் இன்னும் திட்டம் நகரவே இல்லை.

Leave a Reply

Your email address will not be published.