நாய்ப் சுபேதார் சுனி லால்

நாய்ப் சுபேதார் சுனி லால்
நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள் 06 மார்ச் 1968 அன்று தெற்கு காஷ்மீரின் படெர்வா என்னுமிடத்தில் பிறந்து ஜம்முவின் தோடா மாவட்டத்தில் வாழ்ந்து வந்தார்.இளவயதிலேயே செயல்களை திறம்பட முடிவெடித்து நடத்தும் திறமை பெற்ற சுனி லால் அவர்கள் இராணுவத்தில் இணைந்தார்.
ஜம்மு காஷ்மீர் லைட் இன்ஃபான்ட்ரியின் 8வது பட்டாலியனில் இணைந்தார்.
அப்போது அவருக்கு வயது 19.மிக இள வயது வீரராக 1987ல் சியாச்சின் கிளாசியரில் 21153அடி உயரத்தில் பாக் கட்டுப்பாட்டில் இருந்த பானா நிலையைக் கைப்பற்ற நாய்ப் சுபேதார் பானா சிங் அவர்களுடன் இணைந்து செயல்பட தானாக முன்வந்தார்.அந்த ஆபரேசனில் பானா சிங் அவர்கள் பரம்வீர் சக்ரா விருது பெற்றார்.சுனி லால் அவர்களுக்கு சேனா விருது வழங்கப்பட்டது.
1987 ஜீன் மாதத்தில் 8வது ஜம்மு காஷ்மீர் இன்பான்ட்ரி பட்டாலியன் சியாச்சின் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.
ஆபரேசன்  ராஜிவ்
1987ல் சியாச்சின் பகுதியானது பாக் படையால் ஊடுருவப்பட்டிருந்தது. சியாச்சினின் 6500அடி  உயர்ந்த மலை முகட்டில் இருந்த முக்கியத்தும் வாய்ந்த  ‘குவைடு’ நிலையை பாக் வீரர்கள் கைப்பற்றியிருந்தனர்.அந்தப் போஸ்ட்  6,500 அடி உயரமுள்ள  சியாச்சின் பனிமலை பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் இருந்து பாகிஸ்தானியர்களால் எளிதாக இந்திய ராணுவத்தின் நிலைகளை கண்காணிக்க முடியும்.  மேலும் சினைப்பர் துப்பாக்கிகள் கொண்டு நமது வீரர்களை சுட முடியும்.மொத்த சால்ட்டாரோ ரேஞ்சையும் இந்த நிலையில் இருந்து கண்காணிக்க முடியும்.
இது 457 மீட்டர் அளவுள்ள பனி சுவர்களால் ஆன அறன்களை கொண்டுள்ளதால் இந்த நிலையை தாக்குவது கிட்டத்தட்ட  முடியாத காரியமாக இருந்தது. ஏப்ரல் 18 1987ல் குவைட் போஸ்டிலிருந்து சோனம் பாயிண்டில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் இரு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய ராணுவம் பாகிஸ்தானிய படைகளை குவாட் நிலையில் இருந்து வெளியேற்றி அதை கைப்பற்ற முடிவு செய்தது.அப்போது நாய்ப் சுபேதாரின் படையான 8வது காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி சியாச்சினில் தான் இருந்தது.குவாட் நிலையை கைப்பற்றும் பொறுப்பு 8வது ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரிக்கு வழங்கப்பட்டது.
மே 29ல் 2வது லெப்டினன்ட் ராஜிவ் பாண்டே தலைமையிலான JAK LI படை போஸ்டை கைப்பற்றும் முயற்சி செய்தது.ஆனால் துரதிர்ஷ்டவசமாக காரணமாக கைப்பற்ற முடியாமல் போயிற்று.இதன் விளைவாக 10 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.அடுத்த ஒரு மாத தயார் நிலைக்கு பிறகு போஸ்ட்டை கைப்பற்றுவதற்கான புது திட்டத்தை இந்திய ராணுவம் வகுத்தது. 2வது லெப்டினன்ட் ராஜீவ் அவர்களின் நினைவாக அடுத்த நடவடிக்கை “ராஜிவ் நடவடிக்கை” என அழைக்கப்பட்டு  இந்த புதிய திட்டத்திற்கு மேஜர் வாரிந்தர் சிங்   தலைமை தாங்க முடிவு செய்யப்பட்டது.
ஜீன் 23,1987ல் தொடங்கியது நடவடிக்கை.மேஜர் வாரிந்தர் சிங் தலைமையிலான அணி போஸ்டை கைப்பற்றுவதற்கான பல முயற்சிகள் எடுத்தும்  தோல்வியை தழுவினர். பின்பு ஒரு முடிவு எடுக்கப்பட்டு, நாய்ப் சுபேதார் பானா சிங் தலைமையில் நாய்ப் சுபேதார் சுனி லால் உள்ளிட்டு ஐந்து வீரர்கள் போஸ்டை கைப்பற்ற கிளம்பினர்.
அணி இறுதியில் போஸ்டை ஜீன் 26,1987ல் கைப்பற்றியது. அவரும் சுனில்  லாலையும் உள்ளடக்கிய அவரது அணியினரும் 457மீ அளவுள்ள செங்குத்தான பனி மலையை ஏறி தாக்கி கைப்பற்றினர்.அவரது தலைமையிலான அணி மற்ற அணிகளை காட்டிலும் திறமையான முயற்சிகளை மேற்கொண்டனர். பாகிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பார்க்காத நீண்ட நெடிய,கடினமான வழியைத் தேர்ந்தெடுத்து செங்குத்தான பனி முகட்டில் ஏறினர்.பனிப்புயலும்,அதன் காரணமாக பக்கத்தில் யார் வந்தாலும் கண்டுபிடிக்க முடியாத நிலையும் இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருந்தது.மலை முகட்டை அடைந்த நாய்ப் சுபேதார் பானா சிங் அங்கு ஒரே ஒரு பாக் பங்கர் மட்டுமே இருப்பதை கண்டார்.
கையில் ஒரு கிரேனேடை எடுத்து பங்கருக்குள் வீசி பங்கரின் கதவை மூடினார்.உள்ளே இருந்த பாக் வீரர்கள் மரணித்தனர்.வெளியே இருந்த பாக் வீரர்களுடன் கையாலேயே போரிட்டனர்.பங்கருக்கு  வெளியே இருந்த இரு பாக் வீரர்களை துப்பாக்கி முனையில் இருந்த கத்தியால் குத்தி வீழ்த்தினர்.இதை கண்ட சில பாக் வீரர்கள் மலை முகட்டில் இருந்து கீழே குதித்தனர்.பின்னர் இந்திய இராணுவம் ஆறு பாக் வீரர்கள் உடலை கண்டுபிடித்தது.
இந்த வீரச்செயலுக்காக ஜனவரி 26, 1988ல் நாய்ப் சுபேதார் பானா சிங் அவர்களுக்கு உயரிய இராணுவ விருதான பரம் வீர் சக்ரா விருதளிக்கப்பட்டது. அவர் கைப்பற்றிய அந்த போஸ்டானது அவரை மரியாதை செலுத்தும் விதமாக பானா போஸ்ட் என அழைக்கப்படுகிறது.
   பின்பு அவர் சுபேதாராகவும் சுபேதார் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார். அவருக்கு மரியாதைக்குரிய கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. சிபாய் சுனி லால் அவர்களுக்கு சேனா விருது வழங்கப்பட்டது.
ஆபரேசன் ரக்ஷக்

காஷ்மீரின் தோடா-பூஞ்ச் பகுதியை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஹவில்தார் (அப்போது) சுனி லால் சிறப்பு நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.24 ஆகஸ்டு 2000ம் ஆண்டு எதிரி இவரது நிலையை கைப்பற்ற முனைந்த போது வெற்றிகரமாக தடுத்து தனது நிலையை மீண்டும் கைப்பற்றினார்.

அந்த 23/24ம் தேதி இரவு பாகிஸ்தான் அந்த நிலை மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.கடும் மோர்ட்டார் தாக்குதலையும் மீறி ஹவில்தார் சுனி லால் பங்கர் பங்கராக முன்னேறினி அளவற்ற வீரத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தனது வீரர்களையும் உற்சாக மூட்டினார்.இலகுரக இயந்திரத்துப்பாக்கிகளை வைத்து பாகிஸ்தானியர் கடுமையாக தாக்கினர்.திறந்த சுரங்கங்களில் நின்று நம் வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர்.இரு எதிரி வீரர்கள் நமது எல்லைக்குள் குதித்ததை கண்ட சுனி லால் அவர்கள் இலகுரக துப்பாக்கியை எடுத்து போய் அவர்களை சுட்டுவீழ்த்தினார்.நமது வீரர்களின் திறனை பார்த்து அதிர்ந்த பாக் பின்வாங்கி சென்றது.பெரிய அளவிலான ஆயுதங்களையும் விட்டு சென்றது.இதில் மொத்தம் 12 பாக் வீரர்கள் கொல்லப்பட்டனர்.எதிரிகளின் முன்பு மிக சாதூர்யமாக வீரத்துடன் செயல்பட்டார் சுனி லால் அவர்கள்.அவரின் வீரதீர செயலுக்காக அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
குப்வாரா ஆபரேசன் : 24th June 2007
 2007ம் ஆண்டில் நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்களின் பிரிவு குப்வாராவில் செயல்பட்டு வந்தது.பாக் அடிக்கடி தாக்கும் ஒரு எல்லையோர முன் நிலையை தான் அப்போது சுனி லால் அவர்களின் பிரிவு காவல் செய்து வந்தது.அந்த நிலை கிட்டத்தட்ட 4500மீ உயரத்தில் அமைந்திருந்தது.கண்களால் பத்து மீட்டர் தூரம் பார்ப்பதே சிரமம்.குளிரோ 3-5 டிகிரி செல்சியஸ் தான்.ஜீன் 24,2007 அதிகாலை 3.30மணி.சுனி லால் அவர்கள் மற்றும் அவரது பிரிவு வீரர்கள் நிலை அருகே சந்தேகத்திற்குரிய நடமாட்டத்தை கண்டு உடனடியாக களத்தில் இறங்கினர்.
விரைவிலேயே ஊடுருவியிருப்பது பயங்கரவாதிகள் என தெரிந்ததும் அதை எப்படியாவது முறியடிக்க படைப் பிரிவு களமிறங்கியது.
பயங்கரமான சண்டை தொடங்கியது.பயங்கரவாதிகள் கடுமையாக நமது வீரர்களை தாக்கினர்.சண்டை தொடர்ந்து ஒரு மணி நேரம் நடைபெற்றுகொண்டிருந்தது. Nb Sub சுனி லால் அவர்களின் துருப்புகள் பயங்கரவாதிகளை சூழ்ந்து கொண்டனர்.தப்பிக்க தோதான வழிகளை மறித்தனர் நமது வீரர்கள்.
நடந்த சண்டையில் இரு வீரர்கள் குண்டு காயம் அடைய அவர்களை ஊர்ந்தே சென்று தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சென்று பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்தார்.நடந்த சண்டையில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்தினார் நாய்ப் சுபேதார் சுனி லால் அவர்கள்.இதே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அவருக்கு குண்டடி பட்டது.இதில் படுகாயமடைந்த அவர் பின்னர் வீரமரணம் அடைந்தார்.
நாட்டிற்காக அவர் செய்த மொத்த செயல்களுக்காகவும் உயர்ந்த தியாகத்திற்காகவும் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
சுனி லால் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.