பாக்-ஆப்கன் படைகள் மோதல்; பாக்கிற்கு கடும் இழப்பு

பாக்-ஆப்கன் படைகள் மோதல்; பாக்கிற்கு கடும் இழப்பு

பாக்-ஆப்கன் இடையே நடைபெற்று வரும் எல்லை மோதலில் பாக் படைகளுக்கு கடும் இழப்ப ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்ரல் மாவட்டத்தின் கைபர்-பக்துன்வா பகுதி எல்லையில் கடும் மோதல் நடைபெற்றதாக அங்குள்ள செய்திநிறுவனங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

பாக் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர்  Inter-Services Public Relations (ISPR) இந்த செய்தியை உறுதிபடுத்தியதோடு ஐந்து வீரர்கள் காயமடைந்ததாகவும் ஐந்து பொதுமக்கள் காயமடைந்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும் ISPR கூறுகையில் ஆப்கன் படைகள் பெரிய அளவிலான  mortars மற்றும் heavy machineguns வைத்து தாக்குதல் நடத்தியாக கூறினார்.

ஆனால் இணையத்தில் உளாவிய கானொளி மற்றும் செய்திகளின் படி ஒரு பாக் நிலையை ஆப்கன் கைப்பற்றி பாக் பக்கம் பயங்கர உயிர் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

பாக் ஆப்கனில் தாலிபன் ஆட்சிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.