இந்தியாவிற்கு தனது சூப்பர் விமானம் தாங்கி கப்பல் தொழில்நுட்பம் வழங்க இங்கிலாந்து தயார்?

இந்தியாவிற்கு தனது சூப்பர் விமானம் தாங்கி கப்பல் தொழில்நுட்பம் வழங்க இங்கிலாந்து தயார்?

புதுடெல்லியில் நடைபெற்ற கடற்படை கமாண்டர்கள் கான்பரன்சில் இந்திய கடற்படைக்கு மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை குறித்து கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சீங் பேசியுள்ளார்.இதன் பிறகு தான் பிரிட்டனிடம் இருந்து இந்த தகவல் வெளிவந்துள்ளது.

பிரிட்டனின் ஆகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான  HMS Queen Elizabeth கப்பல் போன்று இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்க பிரிட்டன் முன்வந்துள்ளது.

இந்தியாவிற்கான பிரிட்டன் தூதர் டோமினிக் அஸ்குத் கூறும் போது பிரிட்டிஷ் விமானம் தாங்கி கப்பலான  HMS Queen Elizabeth இந்திய பெருங்கடல் பகுதியில் தனது முதல் பயணத்தை மேற்கொள்ளும் என கூறினார்.மேலும் இந்திய-பிரிட்டிஷ் கடற்படைகளுகிடையே ஆன உறவு மேம்பாடு அடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.இந்திய அதிகாரிகளும் ஏற்கனவே ஸ்காட்லாந்தில் உள்ள( Rosyth Dockyard in Scotland) ரோசைத் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டுள்ளனர்.அங்கு தான் இரண்டாவது எலிசபெத் வகை கப்பலான ( Queen Elizabeth-class aircraft) HMS Prince of Wales விமானம் தாங்கி கப்பல் கட்டப்பட்டு வருகிறது.

 மூன்று விமானம் தாங்கி கப்பல்களின் தேவை குறித்து பேசிய தளபதி கரம்பிர் சிங் அவர்கள் தேவைப் படும் போது இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்படை பகுதிகளில் அவசரகாலத்தில் களமிறக்க குறைந்தது மூன்று கப்பல்கள் தேவைப்படும் என கூறியுள்ளார்.அதாவது ஒரு விமானம் தாங்கி கப்பல் ரிசர்வில் வைத்தால் கூட மற்ற இரு பகுதிகளிலும் இரு கப்பல்களை நிலைநிறுத்த முடியும்.

தற்போது கடற்படையில் ஒரு விமானம் தாங்கி கப்பல் தான் உள்ளது.அடுத்த கப்பலான விக்ராந்த் படையில் இணைய இன்னும் இரு வருடங்களாவது ஆகும்.அடுத்த விமானம் தாங்கி கப்பல் 65,000-tonne எடையுடன்  electric propulsion and CATOBAR (Catapult Assisted Take off but Arrested Recovery) வகையில் இருக்கும் என தளபதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.